வருமானவரித்துறை சார்பில் வெளிநாட்டுச் சொத்துகள் வெளிப்படுத்தும் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Nov 2, 2026 - 11:29
 0  19
வருமானவரித்துறை சார்பில் வெளிநாட்டுச் சொத்துகள் வெளிப்படுத்தும் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

வருமானவரித்துறை சார்பில் வெளிநாட்டுச் சொத்துகள் வெளிப்படுத்தும் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி வருமான வரித்துறை சார்பில், சிறுவரி செலுத்துவோருக்கான வெளிநாட்டுச் சொத்துகள் வெளிப்படுத்தும் திட்டம் (FAST-DS 2026) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வரி வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி வருமானவரித்துறை அலுவலர் கணேஷ்குமார் வரவேற்றார். வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் ஆர்.ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்ட்ன்ஸ் ஆப் இந்தியா (ஐசிஏஐ) திருச்சிக் கிளைத் தலைவர் ஆடிட்டர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வருமானவரித் துறை துணை ஆணையர் டி.ஸ்வேதா திட்டம் குறித்து விளக்கினார்.

மேலும், 31.03.2026 நிலவரப்படிசொத்துகளின் மதிப்பீடு, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகள் மற்றும் வருமானவரித் துறையின் மின்னணுத் தாக்கல் இணையதளம் (e-Filing Portal) வாயிலாக படிவம் 1 தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்தும் விவரித்தார்.

இந்த அமர்வில், 31.03.2026 தேதியிலான சொத்து மதிப்பீடு, இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு (immunities) மற்றும் மின்-தாக்கல் (e-Filing) இணையதளம் வழியாக படிவம் 1 சமர்ப்பிக்கும் நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிச.31 ஆகும்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் நிகழ்வில், பங்கேற்ற பட்டயக்கணக்காளர்கள் மற்றும் இதர வரி வல்லுநர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஆர்.ராஜராஜேஸ்வரி விளக்கம் அளித்தார். வருமானவரித் துறை அலுவலர் கே.சுமதி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0