நாகை மெத் போதை குற்றவாளிகளோடு தொடர்பு ; இரண்டு காவலர்கள் பணியிடமாற்றம்

Oct 20, 2026 - 19:52
 0  264
நாகை மெத் போதை குற்றவாளிகளோடு தொடர்பு ; இரண்டு காவலர்கள் பணியிடமாற்றம்

நாகை மெத் போதை குற்றவாளிகளோடு தொடர்பு ; இரண்டு காவலர்கள் பணியிடமாற்றம்

நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் வருவாய் புலனாய்வு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை இந்த வழக்கில் மெத் கடத்துவதற்கு கார் வழங்கிய பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமாருக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர் 

இந்த நிலையில் வேளாங்கண்ணி டிஎஸ்பி-யின் ஓட்டுநர் சிவா, வேளாங்கண்ணி காவல் நிலைய பெண் காவலர் சங்கீதா ஆகியோர் தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மெத் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த சுகனின் உறவினர் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர்தான் வேளாங்கண்ணி டிஎஸ்பி-யின் கார் ஓட்டுனர் சிவா என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சுகன் ஒப்பந்தத்திற்கு நடத்தி வரும் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள குயின்ஸ் பேலஸ் விடுதியில் கைப்பற்றிய டைரியில் டிஎஸ்பி ஓட்டுனர் சிவா மற்றும் பெண் காவலர் சங்கீதா ஆகியோர் கையூட்டு பெற்றதை வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் கண்டறிந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

மேலும், வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த காவல் அதிகாரிகளும் சிக்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0