எங்களுக்கும் போனஸ் கொடுங்க ; மாநகராட்சியிடம் மன்றாடும் துப்புரவு பணியாளர்கள் 

Nov 4, 2026 - 09:47
 0  42
எங்களுக்கும் போனஸ் கொடுங்க ; மாநகராட்சியிடம் மன்றாடும் துப்புரவு பணியாளர்கள் 

எங்களுக்கும் போனஸ் கொடுங்க ; மாநகராட்சியிடம் மன்றாடும் துப்புரவு பணியாளர்கள் 

திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பண்டிகை காலர் போனஸ் கேட்டு திருச்சி மாநகர் செங்கொடி தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. 

இதுகுறித்து திருச்சி மாநகர் செங்கொடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

திருச்சி மாநகராட்சியில், எஸ்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (வேதா) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பள்ளித் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என 2,200 பேர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலியான ரூ.772 வழங்கப்படுவதில்லை. மேலும், சட்டப்படி வழங்கப்பட வேண்டிய 8.33 சதவிகிதம் போனஸ் தொகை (ஒரு மாதச் சம்பளம்) கடந்த மூன்றாண்டுகளில் ஒருமுறை கூட சட்டப்படி வழங்கப்படவில்லை.

இதேபோல், மாநகராட்சியில் பணியாற்றும் 220 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பம்ப்(ஹவுஸ்) ஆபரேட்டர்களுக்கு (ஓ.எச்.டி.)போனஸ் வழங்குவது தொடர்பாக, கடந்த 26-10-2026 அன்று தொழிலாளர் துணை ஆணையர் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் ரூ.7,000 போனஸ் வழங்குவதாக ஏ.எஸ். பவர் சொல்யூஷன்ஸ் - விஷ்வா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால், இதுவரை போனஸ் வழங்க மறுத்து வருகிறது.

எனவே, தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாதச் சம்பளத்துடன் போனஸையும் உடனடியாக வழங்க வலியுறுத்தி, திருச்சி மாநகர் செங்கொடி தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று இரவு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது என்றார்.

 

இந்த நிகழ்வுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் மாறன், மாவட்டப் பொறுப்பாளர் ராஜு, துணைத் தலைவர் பிரியா ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக, மாவட்டப் பொருளாளர் டோம்னிக் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0