ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு ; திமுக நிர்வாகி மீது வழக்கு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு ; திமுக நிர்வாகி மீது வழக்கு
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தில் திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்ததாக திமுக நிர்வாகி ராம்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் ராம்குமார் என்பவர் திமுக பகுதிச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பொதுப்பணிக்காக 1930-ல் எழுதிவைக்கப்பட்ட சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை, 2022-ல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாகவும், மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை புகாரின் அடிப்படையில், அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ராம்குமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இந்த நில ஆக்கிரமிப்பின் பின்னணியில் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய முன்னாள் அமைச்சர்கள், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், உடந்தையாக இருந்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் என பலரும் சிக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இந்த நிலையில், 1930-ல் ரங்கநாதருக்கு நிலத்தை எழுதி கொடுத்தவர்கள் யார், அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தச் சர்ச்சையின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஆவணங்களுடன் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் ஸ்ரீரங்கம் பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0