வெங்காயத்திற்கு வந்த சோதனை; திருவாரூருக்கு ஏற்றிய வெங்காயம் திருச்சியில் காத்திருப்பு 

Nov 4, 2026 - 11:02
 0  19
வெங்காயத்திற்கு வந்த சோதனை; திருவாரூருக்கு ஏற்றிய வெங்காயம் திருச்சியில் காத்திருப்பு 

வெங்காயத்திற்கு வந்த சோதனை; திருவாரூருக்கு ஏற்றிய வெங்காயம் திருச்சியில் காத்திருப்பு 

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்வால் வெளிச்சந்தையில் மக்கள் கஷ்டப்பட்டனர். இதனால் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தமிழக கூட் டுறவுத் துறை சார்பில் 'நாபெட்' எனப் படும் தேசியவேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலம் வெங்காயம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு கடைகளில் ரூ.35க்கு விற்கப்படுகிறது. இதுவரை 3 கட்டங்களாக வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

4ம் கட்டமாக 'நாபெட்'அமைப்பு அனுப்பிய 450 டன் வெங்காயம் தர மற்றதாக இருந்ததால் தமிழக அரசு அதைபெறவில்லை. அந்த வெங்காயம் சென்னை கொருக்குப்பேட்டை சரக்கு ரயில் முனையத்தில் வீணாகி வருகிறது என தகவல் வெளியானது.

இந்தநிலையில், அங்கிருந்து திருவாரூருக்கு வெங்காயம் லோடு ஏற்றிய லாரியுடன் தங்கராஜா என்பவர் புறப்பட்டார். சிறிது நேரத்தில் அவரை தொடர்பு கொண்ட அலுவலர்கள், லாரியை, திருச்சியில் உள்ள வெங்காய மொத்த வியாபார குடோனில் இறக்கி விடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி, லாரி ஓட்டுனரும் வெங்காயத்துடன் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டிக்கு வந்துள்ளார். வெங்காயத்தை பார்த்த மொத்த வியாபாரிகள் வெங்காயம் அழுகிவிட்டதால் மூட்டைகளை இறக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து டிரைவர் தங்கராஜா கூறுகையில், "திருவாரூருக்கு லோடு ஏற்றியதை திருச்சியில் இறக்க சொன்னார்கள். 2 நாள் ஆச்சு. இன்னும் இறக்கவில்லை. நாளைக்குள் (இன்று) இறக்காவிட்டால் நாகை மாவட்டம் வேதாரண்யம் என் சொந்த ஊருக்கு லாரியை எடுத்து சென்று அங்கு போலீஸ் ஸ்டேஷனில் லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விடுவேன் என்றார்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0