மதுரையில் முதல்வர் விஜய்: கவனம் ஈர்த்த திரிஷா போஸ்டர்
மதுரையில் முதல்வர் விஜய்: கவனம் ஈர்த்த திரிஷா போஸ்டர்
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்க விழாவிற்கு வரும் முதல்வர் விஜய்யை வரவேற்று திரிஷா நற்பணி மன்றத்தினர் மதுரை மாநகர் முழுவதும் நோட்டீஸ் ஒட்டி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு ;
மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக அவரது ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றி விஜய் முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மதுரை மாநகருக்கு வருகை தந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் சார்பாக தமிழகத்தில் பிறக்கும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தில் தன்னையே தாய் மாமனாக என்று கூறி ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் முதலமைச்சர் விஜய் வரும் பகுதிகளில் எந்தவிதமான போஸ்டர்களும் ஒட்டக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டதால் முதல்வர் வரும் பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0