நல்ல நேரத்திற்காக காத்திருந்த விஜய்

Apr 2, 2026 - 13:41
 0  47
நல்ல நேரத்திற்காக காத்திருந்த விஜய்

நல்ல நேரத்திற்காக காத்திருந்த விஜய் 

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய், திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு அலுவலகத்தில் கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி உதவி ஆணையருமான முத்து முருகேச பாண்டியிடம் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாலக்கரை அலுவலகத்திற்கு வந்த விஜய் நல்ல நேரத்திற்காக காத்திருந்து 12:30 மணிக்கு மேல் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 கிறிஸ்தவர்கள் புனித நாளாக கருதும் பெரிய வியாழன் இன்று என்பதாலும், 12 30 மணி முதல் 1:30 மணி வரை நல்ல நேரம் என்பதாலும் அதற்காக காத்திருந்து 12.30 மணிக்கு மேல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் 

 வேட்பு மனு தாக்கலின்போது  த.வெ.க முக்கிய நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விஜய்க்கு மாற்று வேட்பாளராக கு.பா.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வேட்பு மனு தாக்கல் செய்தார். 

வேட்பு மனுவை தாக்கல் செய்த விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தனது முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கிய அதே இடத்தில் இன்று மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

சுமார் 1,500 பொதுமக்கள் மட்டுமே கூட வேண்டும் என்று காவல்துறை 25க்கும் மேல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி கொடுத்திருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் மரக்கடை பகுதியில் கூடி ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1