திருச்சியில் வித்யாரம்பம்; நெல்மணிகளில் 'அ' எழுதிய வடமாநிலக் குழந்தைகள்
திருச்சியில் வித்யாரம்பம்; நெல்மணிகளில் 'அ' எழுதிய வடமாநிலக் குழந்தைகள்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி, கல்வி மற்றும் கலைகளைத் தொடங்குவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நன்னாளில் கல்வியைத் தொடங்கினால், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாய் அமையும் என்பது பெற்றோர்களின் ஆழமான நம்பிக்கை.
அந்த வகையில், திருச்சியில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
பள்ளியில் நடைபெற்ற இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், மழலைகள் தங்களது பிஞ்சு விரல்களால் நெல்மணி பரப்பப்பட்ட வாழை இலையில் 'அ' என்ற தமிழ் எழுத்தை எழுதி தங்களது கல்விப் பயணத்தைத் இனிதே தொடங்கினர்.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, தொழில் நிமித்தமாகப் பிற மாநிலங்களில் இருந்து திருச்சிக்கு வந்து தங்கியுள்ள வடமாநிலப் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை இந்த சுபநாளில் பள்ளியில் சேர்த்தனர்.
மொழி, இனம் கடந்து தமிழ் மண்ணின் பாரம்பர்ய முறைப்படி வடமாநிலக் குழந்தைகளும் நெல்மணிகளில் "அ" எழுதத் தொடங்கியது நிகழ்ச்சியில் கூடுதல் அழகைக் சேர்த்தது.
குழந்தைகளின் மழலைச் சிரிப்போடும், பெற்றோர்களின் நம்பிக்கையோடும் திருச்சியில் தொடங்கிய இந்த வித்யாரம்பம், புதியதொரு கல்வி அத்தியாயத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது என்பதும், தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவையின் 15 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விஜயதசமி நன்னாளில் திருச்சி பீமநகர் ஶ்ரீசெடல் மாரியம்மன் கோவிலில் வித்யாரம்பம் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியானது நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0