தேனிசைத் தென்றல்' தேவா காலமானார்
தேனிசைத் தென்றல்' தேவா காலமானார்
தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா, தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர்.
கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த 'மனசுக்கேத்த மகாராசா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் மறுபுறம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்குத் தனித்த ரசிகர் பட்டாளம் இருந்தது.
2022ஆம் ஆண்டு 'தேவா தேவாதான்' இசை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் இதை சிலாகித்துப் பேசியிருப்பார்.
கானா பாடல்களை திரையுலகில் மைய நீரோட்டப்படுத்தியதில் தேவா முக்கியமானவராக அறியப்படுகிறார். தன்னை கானா பாடல்களோடு முத்திரை குத்துவது பற்றி தேவா பல இடங்களில் பேசியிருந்தாலும் அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் தனித்துத் தெரிவது குறித்து ஒரு முறை பேசியபோது, "கானாக்கள் என் சிறப்பம்சமாக ஆகிவிட்டன. எத்தனையோ இசையமைப்பாளர்கள் 'மெலடி' பாடல்களைத் தருகிறார்கள். அவர்களில் ஒருவராகிப் போயிருப்பேன். ஆனால், கானா பாடல்களைத் தந்த காரணத்தால்தான் வித்தியாசமாக நிற்கிறேன்" என்றார் இசையமைப்பாளர் தேவா.
அதோடு, "உலகமெங்கும் வசிக்கும் தமிழ் மக்கள் தங்கள் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் அந்த கானா பாடல்களைப் பயன்படுத்துவதைக் கேள்விப்படும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றும் பிபிசி தமிழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக தனக்கு "கானா ஒரு கண் என்றால் மெலடி மற்றொரு கண்" என சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தேவா குறிப்பிட்டிருந்தார்.
சென்னை மைலாப்பூரில் பிறந்த தேவா, தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் அவருக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கவிஞர் கண்ணதாசன் நினைவு நாளான இன்று தேவா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0