தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோவையில் கைது
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோவையில் கைது
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட 6 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்து தாராபுரம் அழைத்து சென்றனர்.
தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய், அக்.4-ம் தேதி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வீராச்சிமங்கலம் என்ற பகுதியில் முதல்வர் செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா தொண்டர்களுடன் வாகன பேரணியாக வந்தார்.
முதல்வர் வருகைக்காக அங்கு நின்றிருந்த போலீஸார் பாதுகாப்பு கருதி அவர்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அப்போது நாதகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் முதல்வரின் வாகனம் அவ்வழியாக வரத்தொடங்கியது. இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், தேர்தல் பரப்புரையின் போது பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தை கார்த்திகா தலைமையில் நாதகவினர் முற்றுகையிட்டனர். இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் வந்து சில நாட்கள் கழித்து தற்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்பட 6 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டோர் மீது ஐந்து குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா வெற்றி பெற்றார். நாதக வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0