திருச்சியில் அதிர்ச்சி சம்பலம்; பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாகிய சிறுவன்; போலீசார் விசாரணை
திருச்சியில் அதிர்ச்சி சம்பலம்; பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாகிய சிறுவன்; போலீசார் விசாரணை
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜன.12-ம் தேதி தாய்க்கு உதவுவதற்காக அவரது வீட்டில் இவரது உறவினரான 17 வயது சிறுவன் தங்கி உள்ளார். இதனால் சிறுமியிடம் பேசும் பழக்கம் சிறுவனுக்கு ஏற்பட்டது. இதனால் சிறுமியை காதலித்து பழகியதாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாததால் அவ்வப்போது சிறுவனும், சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர். இதில் சிறுமி 3 மாத கர்ப்பிணியானார்.
இது குறித்த வழக்கு குழந்தைகள் நலக் குழுவின் விசாரணைக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0