மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்; வருமான வரியில் மாற்றமில்லை; சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

Feb 1, 2026 - 12:35
 0  48
மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்; வருமான வரியில் மாற்றமில்லை; சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்; வருமான வரியில் மாற்றமில்லை; சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு ;

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

"காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்' என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்”

“மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்”

செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு.

பயோ ஃபார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

“தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்”

"சென்னை - பெங்களூரு; சென்னை - ஐதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைகிறது"  

ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்

தமிழ்நாட்டின் பொதிகை மலை, இமாச்சல், உத்தராகண்ட், ஜம்முவில் | மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம்.

தமிழ்நாட்டின் தோழி விடுதிகளை பின்பற்றி நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மகளிர் விடுதி அமைக்கிறது மத்திய அரசு.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.

2026-27 நிதியாண்டில் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு.

2026-27 நிதியாண்டின் மூலதன செலவாக ரூ.12.2 லட்சம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

 “25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்”.

முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

“பொது போக்குவரத்துக்கு நாடு முழுவதும் 20 நீர்வழித் தடங்கள் அமைக்கப்படும்”

“பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.”

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.

நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்.

வரி செலுத்துபவர்கள் மார்ச் 31 வரை பெயர் கட்டணத்துடன் திருத்த ITR தாக்கல் செய்யலாம். இது தவறுகளை சரிசெய்ய உதவும் எளிய வழியாகும்.

புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும். சாதாரண வரி செலுத்துபவர்கள் எளிதாக ITR தாக்கல் செய்யும் வகையில் படிவங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கான LRS (Liberalised Remittance Scheme) கீழ் TCS விகிதம் 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும்.

 வெளிநாட்டு சுற்றுலா பயணத் தொகுப்புகளுக்கு TCS விகிதம் 5% மற்றும் 20%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகை வரம்பு இல்லை. இது சர்வதேச பயணத் முன்பதிவு செய்யும் போது முன்கூட்டியே வரி சுமையை குறைக்கும்

தனிநபர் வருமான வரிவிலக்கு வரம்பில் மாற்றமில்லை. 

17 வகை புற்றுநோய் மருந்துகள் இறக்குமதி செய்யப்படும்.

 வருமான வரி கணக்கு மறு ஆய்வுக்குப் பிறகும் ரிட்டன் தொடர்பாக மறுமுறை விண்ணப்பிக்கலாம்.

டேட்டா சென்டர்களுக்கு வரி விலக்கு.

2026-27 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2025-26இல் இருந்த 4.4 சதவீதத்தை விட குறைவு. நிதி ஒழுங்குமுறையை பலப்படுத்தும் முக்கிய நடவடிக்கை இது.

கடந்த 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0