முன்னாள் எம்பி ப.குமார் தாயார் காலமானார்: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

Jan 7, 2026 - 10:27
 0  8
முன்னாள் எம்பி ப.குமார் தாயார் காலமானார்: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

முன்னாள் எம்பி ப.குமார் தாயார் காலமானார்: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் 

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா புனல்குளம் கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மறைந்த பழனிவேல் என்பவரது மனைவியும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், திருச்சி முன்னாள் எம்பியும் ஆன ப.குமாரின் தாயார் ப.முனியம்மாள் வயது முதிர்வு காரணமாக புனல்குளம் கிராமத்தில் நேற்று இயற்கை எய்தினார். 

அம்மையாரது இறுதி ஊர்வலம் கந்தர்வக்கோட்டை புனல்குளம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று மாலை நடைபெறுகிறது. குமாரின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் தத்தம் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் அவர்களுடைய தாயார் திருமதி ப. முனியம்மாள் அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் ப.குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திருமதி முனியம்மாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0