ரூ.700 லஞ்சம்; மணப்பாறை மாரியம்மன்கோவில் முன்னாள் செயல் அலுவலருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை- திருச்சி நீதிமன்றம்
ரூ.700 லஞ்சம்; மணப்பாறை மாரியம்மன் கோவில் முன்னாள் செயல் அலுவலருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை- திருச்சி நீதிமன்றம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வாகைகுளத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா், மணப்பாறை மாரியம்மன் கோயிலில் பரம்பரையாக முடி இறக்கும் தொழில் செய்து வந்தாா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம், தனது பணியினை செய்வதற்காக கோயிலுக்கு நிா்வாக அலுவலகம் வழியாகச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு பணியில் இருந்த செயல் அலுவலா் விநாயகவேல் என்பவர் மணிகண்டனை அழைத்து பேசியுள்ளாா்.
நீ தொடர்ந்து கோயிலில் முடி இறக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றால் தனக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். பின்னா், ரூ.300 குறைத்து ரூ.700 வழங்குமாறு கறாராக கேட்டுள்ளார். இதற்கு உடன்படாத மணிகண்டன், திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரசன்ன வெங்கடேஷிடம் சென்று புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மாரியம்மன் கோயிலில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனா். பின்னர் இது வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், பொறி வைப்பு நடவடிக்கையாக மணிகண்டன் இடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். மணிகண்டன் இடமிருந்து
விநாயகவேல் ரூ.700-ஐ , லஞ்சமாக பெற்றபோது, கையும் களவுமாக கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
பின்னர் இது குறித்த வழக்கு திருச்சி மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில், ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் சாட்சிகளை ஆஜா்படுத்தி வழக்கு விசாரணையை மேற்கொண்டனா். அரசு வழக்குரைஞா் கோபிகண்ணன் வாதிட்டாா்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி. புவியரசு, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் செயல் அலுவலர் விநாயகவேலுக்கு ஊழல் தடுப்பு சட்ட ஏழாவது பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
மற்றொரு பிரிவிலும் ரூ.ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியுள்ளாா்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0