10 மாதத்தில் 100 பேர் மீது குண்டாஸ் -திருச்சி எஸ்பி அதிரடி

Nov 12, 2025 - 15:55
 0  64
10 மாதத்தில் 100 பேர் மீது குண்டாஸ் -திருச்சி எஸ்பி அதிரடி

10 மாதத்தில் 100 பேர் மீது குண்டாஸ் -திருச்சி எஸ்பி அதிரடி

140 ஆண்டுகால திருச்சி மாவட்ட காவல்துறை வரலாற்றில் அடுத்தடுத்து குண்டாஸ் நடவடிக்கை எடுத்த முதல் எஸ்பி என்ற பெருமையை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பெற்றுள்ளார். இவர் திருச்சியில் பதவியேற்றது முதல் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தனது தனி திறமையாலும், பல்வேறு கூட்டு நடவடிக்கைகள் மூலம் மாநிலம் கடந்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்து வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 10 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் பல்வேறு மாநிலங்கள் கடந்து குற்றவாளிகளை கைது செய்ததுடன் 10 கிலோ தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம், கடந்த 06.01.2025ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் மீது தடுப்பு காவல் சட்டம் எனும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்களை குண்டாஸில் அடைத்த நிகழ்வுடன் 100 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 100 எதிரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருச்சி மாவட்ட சரித்திரத்தில் இதுவரை இல்லாத ஒன்றாகும். 

செல்வ நாகரத்தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பத்து மாதத்தில் 100 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கண்காணிக்க பல்வேறு குழுக்களை அமைத்து அவர்கள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தான் எஸ் பி யாக பதவி ஏற்ற 10 மாதத்தில் 100 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்த முதல் எஸ்பி என்ற பெருமையை பெற்றிருக்கிறார் எஸ்பி செல்வ நகரத்தினம்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1