தெற்கு ரயில்வே பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
தெற்கு ரயில்வே பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி துவக்கம்
பொன்மலை ரயில்வே இன்ஸ்டிடியூட் மைதானம் 9.10.25, 10.10.25 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
தெற்கு ரயில்வேயிலுள்ள சென்னை, திருச்சி, பொன்மலை, மதுரை, சேலம், பாலக்காடு 6 கோட்ட ரயில்வே பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று பொன்மலை ரயில்வே மைதானத்தில் பொன்மலை ரயில்வே பணிமனை மேலாளர் சந்தோஷ்குமார் பட்ரோ, கெளரவ விருந்தினராக தென்னக ரயில்வே மகளிர் வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் ரிதாஞ்சலி ஆகியோர் தலைமை ஏற்று தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் ஸ்ரீ அதுல் பிரியதர்ஷி, பிராந்திய மேலாளர் ஸ்ரீவேலப்பன், தலைமை மேலாளர் வினோதினி மற்றும்பொன்மலைப்பட்டி இந்திய வங்கி மேலாளர் பாரதிதாசன் விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டிகளை திருச்சி மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் நடத்தி கொடுக்கிறார்கள்.
முன்னதாக, விளையாட்டுப் போட்டிகளுக்கு வந்த வீரர்களை துணை முதன்மை பர்சனல் ஆபீஸர் எஸ்.திருமுருகன் (Dy Cpo) வரவேற்றார். பொன்மலை ரயில்வே பள்ளியின் தலைமை ஆசிரியர் டாக்டர் பி.ராஜேஷ் பொன்குமார் நன்றியுரையாற்றினார்.
விளையாட்டுகள் :கால்பந்து, கைப்பந்து, பேட்மிட்டன் மற்றும் தடகள போட்டிகள் நடக்கிறது.1.ரயில்வே சீனியர் செகண்டரி பள்ளி, பெரம்பூர், சென்னை பிரிவு.
2.ரயில்வே உயர்நிலைப்பள்ளி கோல்டன் ராக், திருச்சி பிரிவு.
3.ரயில்வே உயர்நிலைப் பள்ளி போத்தனூர், கோயம்புத்தூர், சேலம் பிரிவு.
4.ரயில்வே சீனியர் செகண்டரி பள்ளி, ஈரோடு, சேலம் பிரிவு.
5.ரயில்வே சீனியர் செகண்டரி பள்ளி. மதுரை, பிரிவு.
6.ரயில்வே உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு (கேரளா) பிரிவு. பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்துக் கொள்கிறார்கள்.
பள்ளிகளுக்கு இடையேயான நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மாலை 5.00 மணிக்கு பரிசு அளிப்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
2