மயிலாடுதுறை அருகே திமுக தொழிற்சங்க நிர்வாகி வெட்டிக்கொலை
மயிலாடுதுறை அருகே திமுக தொழிற்சங்க நிர்வாகி வெட்டிக்கொலை
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனரும் தொழிற்சங்க நிர்வாகியுமான தமிழ்ச்செல்வன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் தமிழ்ச்செல்வன் என்பவர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் பொறுப்பாளராக இருந்து வநதுள்ளார். வழக்கம் போல் அதிகாலை 4:30 மணிக்கு பணிக்கு சென்றுவிட்டு, இரவில் பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். நேற்றிரவு ஆனதாண்டவபுரம் ரயில்வே கேட் அருகே, ஆற்காடு சாலையில் மர்ம நபர்களால் தமிழ்ச்செல்வன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.
நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு மாலதி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது குடும்பத்தினர் அனைவரும் திமுகவை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0