காவிரி பிரச்சனையில் இன மோதலை உருவாக்குவதை அனுமதிக்க கூடாது- பி.ஆர். பாண்டியன் 

Jul 8, 2026 - 13:20
 0  24
காவிரி பிரச்சனையில் இன மோதலை உருவாக்குவதை அனுமதிக்க கூடாது- பி.ஆர். பாண்டியன் 

காவிரி பிரச்சனையில் இன மோதலை உருவாக்குவதை அனுமதிக்க கூடாது- பி.ஆர். பாண்டியன் 

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தூண்டுதலில் தமிழ் திரைப்படங்கள் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம். ஜூலை 15 ல் பெங்களூர் ஓசூர் சாலையில் சாலை மறியல் செய்வோம் என வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு பாதிப்பென்றால் காங்கிரஸ் தேசிய தலைமை பொறுப்பேற்க வேண்டும் என பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் அம்மாநில முதலமைச்சர் டி கே சிவகுமார் ஈடுபட்டு வருகிறார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது முதல் 15 ஆண்டுகளுக்கு காவிரி நடுவர் மண்ற இறுதி தீர்ப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. 

இந்நிலையில் கர்நாடக அரசு 2021இல் வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து அன்றைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மத்திய நீர் வள ஆணையரிடம் வழங்கினார். அன்றைய தலைவர் எங்களுக்கு காவிரியில் தலையிட அதிகாரம் இல்லை. எனவே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கிறோம் என்றார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை பரவராஜ் பொம்மை நேரில் சந்தித்து வரைவு திட்ட அறிக்கை கொடுத்து அனுமதி கோரினார். 

இந்நிலையில் இதனை விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகம் அனுமதி கோரியது. இந்த சூழலில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் எனது தலைமையில் (பி.ஆர்.பாண்டியன்) ஐந்து பேர் கொண்ட குழு நேரில் சந்தித்து மேகதாட்டு அணை கட்டினால் தமிழகம் அழிந்து போகும். எனவே, அதற்கு ஆதரவு அளிக்கக் கூடாது என நேரில் வலியுறுத்தினோம். இதனை ஏற்றுக் கொண்டு மறுப்பு தெரிவிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.  

இதன் அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணான வகையில் சட்டவிரோதமான மேகதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க கூடாது என மறுப்பு தெரிவித்ததால் காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய நீர் வள ஆணையத்திற்கு திருப்பி அனுப்பியது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் வரைவுத்திட்ட அறிக்கைக்கு எதிராக தடை விதிக்க கோரி தமிழகம் வழக்கு தொடர்ந்தது. 

2025 நவம்பர் 13ஆம் தேதி நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பில் வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய ஒவ்வொரு மாநிலங்களுக்கும்உரிமை உள்ளது. அதற்கு தடை விதிக்க முடியாது. விரைவு திட்ட அறிக்கை சட்டத்திற்கு உட்பட்டதா? என்பதை மத்திய அரசு நீர் வள ஆணையும் முடிவு எடுத்துக் கொள்ளும்.எனவே தடை விதிக்க இயலாது எனவும், தடை விதிக்க இயலாது என்கிற தீர்ப்பை கர்நாடகம் தனக்கு அணை கட்டுவதற்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. 

இந்நிலையில் கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவக்குமார் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பாட்டீலை சந்தித்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மேகதாட்டு அணைக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு அணைகட்ட அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கை ஆகும். எனவே தமிழக அரசு உடனடியாக டிகே சிவக்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். 

இந்நிலையில் டிகே சிவகுமார் தூண்டுதலில் கர்நாடக இன வெறியர் வாட்டாள் நாகராஜ் ஜூலை 15 ல் ஓசூர் பெங்களூர் சாலையை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தமிழகத் திரைப்படங்கள் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளார். 

இதனால் தமிழகம் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. எந்நேரமும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது. 

எனவே, தமிழ்நாட்டில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தேசிய தலைமையிடம் எடுத்துரைத்து மேகதாட்டு பிரச்சனையில் சட்டப்படி நடந்து கொள்ள டி.கே.சிவக்குமாருக்கு அறிவுறுத்த வேண்டும்.

காவிரி பிரச்சனையில் இன மோதலை உருவாக்குவதை அனுமதிக்க கூடாது. தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் கடன்தள்ளுபடிக்கான அரசாணை விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் நிலையில் உள்ளது. கடந்த கால நடைமுறைக்கு முரணாக உள்ளது. முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடன் வசூல் என்கிற பேரில் விவசாயிகளை நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக கடனை கட்டி விட்டால் பின்னேர்ப்பு மான்யமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்கிற பொய் செய்தியை கூட்டுறவுத்துறை பரப்பி வருகிறது. முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0