அதிமுகவை நான் வழிநடத்துகிறேன் என கூறுவது தவறான தகவல்- லீமாரோஸ் மார்ட்டின்
அதிமுகவை நான் வழிநடத்துகிறேன் என கூறுவது தவறான தகவல்- லீமாரோஸ் மார்ட்டின்
அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தலைவர்களின் இணைப்பு” என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நீதிக்கட்சி தலைவர் சர் ஏ டி பன்னீர்செல்வம் 138 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது;
அதிமுகவை நான் வழிநடத்துகிறேன் என கூறுவது தவறான தகவல். அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்த்துக் கொள்வார்.
அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கட்சி ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு.
பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன்.
எனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை கடமையாக எண்ணுகிறேன். தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர்ந்திட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அயராது பாடுபடுவோம்.
அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நான் தான் காரணம் என சிலர் கூறுவதை சட்டப்படி பார்த்துக் கொள்வோம் எனப் பேசினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0