லால்குடி கோட்டத்தில் ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பணிகளுக்கு அடிக்கல்; ரூ.57.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த அருண்நேரு எம்.பி.

Feb 21, 2026 - 15:09
 0  11
லால்குடி கோட்டத்தில் ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பணிகளுக்கு அடிக்கல்; ரூ.57.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த அருண்நேரு எம்.பி.

லால்குடி கோட்டத்தில் ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பணிகளுக்கு அடிக்கல்;
ரூ.57.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த அருண்நேரு எம்.பி.

   திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டம், இலால்குடி உட்கோட்டத்தை சார்ந்த ஏதுமலை பெரகம்பி சாலை கி.மீ.6/4 மாவட்ட இதர சாலையாகும். இச்சாலையில் கி.மீ.2/3-4/4-ல் சுமார் 2.10 கி.மீ நீளமுள்ள சாலை எதுமலை வனக்காப்பு காடுபகுதியில் செல்வதால் சாலையில் எவ்வித மேம்பாடும் செய்யப்படாமல் இருந்தது. 
   மேலும் இச்சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்த காரணத்தால் பெரகம்பி மக்கள் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் வனத்துறை அனுமதிக்காக வனத்துறை Pழசவயட-ல்அனுமதி விண்ணப்பம் கோரப்பட்டது. வனத்துறையின் நெடுஞ்சாலைத்துறைக்கு தேவையான (2100x7.50 = 1.575 ஹெக்டேர்) நிலத்திற்கு இணையாக இரண்டு மடங்கு நிலம் சுமார் 3.15 ஹெக்டேர் நிலம் கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்க இயலும் என்று தெரிவித்தனர். 
   

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் 20-02-2025 அன்று வனப்பகுதி அருகிலேயே இடம் தேர்வு செய்து, 3.15 ஹெக்டேர் நிலம் கொடுக்க கடிதம் மூலம் இசைவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து வனத்துறை அனுமதி 30-07-2025 அன்று கிடைத்தது. பின்பு நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி ஒப்புதலுக்கு அனுப்பட்டு 30-01-2026 அன்று ரூ.383.00 இலட்சத்துக்கு அரசு அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் இன்று 21-02-2026 பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர். 
    இதனைத் தொடர்ந்து, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், காணக்கிளியநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் பயன்பாட்டிற்காக ரூபாய் 12 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டும் பணிக்கும், காணக்கிளியநல்லூரில் ரூபாய் 2.72 கோடி மதிப்பீட்டில் 4000 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய காவல் நிலைய கட்டுமானப்பணிக்கும் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பணிகளை விரைவாக மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அறிவுறுத்தினர். 
   மேலும், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூபாய் 17.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக்கட்டடத்தையும், இலால்குடி ஊராட்சி ஒன்றியம், பூவாளுர் பின்னவாசல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வகுப்பறை கட்டடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சிறப்பான முறையில் கல்வி பயின்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தினர். 
   இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.ஸ்ரீதர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி, கோட்டப்பொறியாளார் கண்ணன், உதவி கோட்டப் பொறியாளர் சிட்டிபாபு, உதவி பொறியாளர் செம்புலிங்கம், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக நிர்வாக செயற்பொறியாளர் திருமலைசாமி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0