தூய்மை பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் ; திருச்சியில் 3,243 பணியாளர்கள் பயன்பெறுவர்
தூய்மை பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் ; திருச்சியில் 3243 பணியாளர்கள் பயன்பெற வாய்ப்பு
தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடக்க விழா மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் இன்று நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில் நடைபெற்ற விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் உணவு அருந்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். நிரந்தர, தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்,. ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் என மொத்தம் 3,243 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும், ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என மேயர் அன்பழகன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துணை ஆணையர் க.பாலு, மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நகரப் பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் சென்னுகிருஷ்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் தத்தம் பகுதிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களுடன் உணவருந்தி மகிழ்வித்து மகிழ்ந்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0