அமித்ஷா பொதுக்கூட்டத்தில் அத்துமீறிய ட்ரோன் ;என்.எஸ்.ஜி வீரர்கள் சுட்டு வீழ்த்தியதால் பரபரப்பு

Feb 14, 2026 - 21:22
Feb 14, 2026 - 21:31
 0  58
அமித்ஷா பொதுக்கூட்டத்தில் அத்துமீறிய ட்ரோன் ;என்.எஸ்.ஜி வீரர்கள் சுட்டு வீழ்த்தியதால் பரபரப்பு

அமித்ஷா பொதுக்கூட்டத்தில் அத்துமீறிய ட்ரோன் ;என்.எஸ்.ஜி வீரர்கள் சுட்டு வீழ்த்தியதால் பரபரப்பு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிப்ரவரி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின்போது, பாதுகாக்கப்பட்ட வான்வெளிக்குள் (No-fly zone) அத்துமீறிப் ட்ரோன் ஒன்று பறந்து வந்தது.

இதனைப் பார்க்க அதிர்ச்சியுற்ற என்.எஸ்.ஜி (NSG) கமாண்டோக்கள் அந்த ட்ரோனை, ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கியை கொண்டு சுட்டு வீழ்த்தினர் . 

மேலும், திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் இந்த ட்ரோனை இயக்கியது கண்டறியப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமின்றி அவர் அமித்ஷாவின் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விரைந்து பிடித்தனர். அவர் எதற்காக டிரோனை பறக்கவிட்டார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அமித்ஷா வருகையையொட்டி காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. அமித்ஷா வரும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. சுமார் 700 புதுச்சேரி காவல்துறையினர் மற்றும் 400 மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இருப்பினும் அதனை தாண்டி டிரோன் பறந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0