ஸ்ரீரங்கத்தில் ஒரு பூத்தில் 5 வாக்குகள் மட்டுமே பெற்ற திமுக: விசாரணை நடத்த கோரிக்கை 

May 7, 2026 - 09:26
 0  85
ஸ்ரீரங்கத்தில் ஒரு பூத்தில் 5 வாக்குகள் மட்டுமே பெற்ற திமுக: விசாரணை நடத்த கோரிக்கை 

ஸ்ரீரங்கத்தில் ஒரு பூத்தில் 5 வாக்குகள் மட்டுமே பெற்ற திமுக: விசாரணை நடத்த கோரிக்கை 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவானது பேசு பொருளாகியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு ;

ஸ்ரீரங்​கம் சட்டமன்றத் தொகு​தி​யில் திமுக சார்​பில் எஸ்​.துரை​ராஜ், அதி​முக சார்​பில் ஆர்​.மனோகரன், தவெக சார்​பில் ரமேஷ் உட்பட 21 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டனர். 

ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,87,027 பேரில், 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 2,55,293 பேர் வாக்களித்துள்ளனர். இதில், தவெக வேட்​பாளர் ரமேஷ் 1,03,235 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். திமுக துரை​ராஜ் 69,645 வாக்​கு​களும், அதி​முக மனோகரன் 65,819 வாக்​கு​களும் பெற்​றனர்.

இந்​நிலை​யில், இந்​தத் தொகு​தி​யில் வாக்​குச்​சாவடி வாரி​யாக கட்​சிகள் பெற்ற வாக்​கு​கள் விவரம் வெளி​யானது. 

இதில், ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91-வது வாக்​குச்​சாவடி​யில் திமுக வேட்​பாளருக்கு 5 வாக்​குகள் மட்​டுமே கிடைத்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இது திமுக​வினரிடையே கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்திள்​ளது. இங்கு அதி​முக​வுக்கு 236 வாக்​கு​களும், தவெக​வுக்கு 51 வாக்​கு​களும் கிடைத்​துள்​ளன.

இதே​போல, 87-வது வாக்​குச் ​சாவடி​யில் திமுக​வுக்கு 42 வாக்​கு​களும் 93-வது வாக்​குச்​சாவடி​யில் 41 வாக்​கு​களும் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இது திமுகவினரிடையே அதிர்ச்​சியையும், கோபத்தையும் ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து திமுக நிர்​வாகி​கள் தெரிவித்ததாவது; தி​முக​வில் வாக்​குச்​சாவடி முகவர்​கள், பூத் கமிட்டி உறுப்​பினர்​கள், இளைஞரணி நிர்​வாகி, மகளிரணி நிர்​வாகி என ஒவ்​வொரு வாக்​குச்​சாவடிக்கும் தலா 14 பேர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

 ஆனால், திமுகவுக்கு 5 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளது என்பது அதிர்ச்​சி​யளிக்​கிறது. கட்​சி​யின் பூத் கமிட்டி நிர்​வாகி​களே வாக்​களிக்​க​வில்லையா அல்லது வேறு ஏதும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து​ கட்சி தலைமை விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனத் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1