தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு; நாளை ஆளுநரை சந்திக்கும் விஜய் 

May 5, 2026 - 14:11
 0  111
தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு; நாளை ஆளுநரை சந்திக்கும் விஜய் 

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு; நாளை ஆளுநரை சந்திக்கும் விஜய் 

தவெக தலைவர் ஆட்சியமைக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியதோடு, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையின் முடிவில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அனைத்து தவெக எம்எல்ஏக்கள் இடமும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி களம் கண்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலமான 118 இடங்​களைப் பெறாத​தால், தமிழகத்தில் தற்​போது ‘தொங்கு சட்டப்​பேர​வை’ அமை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்று வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். தாவேக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் உறுதிமொழி பத்திரம் மூலம் கையெழுத்து பெறப்பட்டு விஜய் முதல்வராக பொறுப்பு ஏற்று ஆட்சியமைக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியதோடு நாளை நேரில் சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளது தவெக. 

மேலும், அதிமுக , விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே, தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தி வருகிறார்கள்.

தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் ஆலோசனை நடத்தும் முன்பு கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0