திருச்சியில் விஜய் பிரசாரம்;; தேவாலயத்தில் முட்டி போட்டு பிரார்த்தனை ; விமான நிலைய சாலை ஸ்தம்பித்தது
திருச்சியில் விஜய் பிரசாரம்;; தேவாலயத்தில் முட்டி போட்டு பிரார்த்தனை ; விமான நிலைய சாலை ஸ்தம்பித்தது
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் 2-ம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் 03.05 மணிக்கு வருகை தந்தார்.
தனி விமானத்திலிருந்து தரை இறங்கிய விஜய் பிரத்யேக பேருந்தில் ஏறி, விமான நிலைய சிறப்பு விருந்தினர் வெளியேறும் பாதை வழியாக தனது பிரச்சார வாகனத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் குப. கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.
பின்னர், திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வயர்லஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம் மற்றும் கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரிக்க புறப்பட்டவர், வயர்லஸ் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்று வாசலில் இருந்து மண்டியிட்டவாறு சென்று மனம் உருக பிரார்த்தித்தார். காஜாமலை பள்ளிவாசல், கொட்டப்பட்டு பச்சநாச்சியம்மன் கோயில் என மும்மத ஆலயங்களிலும் தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் மீண்டும் தனது பிரசார வாகனத்தில் ஏறி பொதுமக்களிடமும் தொண்டர்களிடமும் கைசைத்தவாறு சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பாதையில் பிரசாரம் செய்து வருகிறார். விஜய் ரோடு ஷோ செல்லும் சாலை முழுவதிலும் குழந்தைகள் சிறுவர்கள் முதியோர்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் குவிந்து ஆரவாரத்துடன் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காஜாமலை கடந்து எஸ் ஆர் எம் ஹோட்டல் வழியாக தனது இரண்டு மணி நேர சாலை உலாவை முடித்துக் கொண்டு மீண்டும் திருச்சி புதுக்கோட்டை சாலையை வந்தடைந்து விமான நிலையம் சென்றடைந்தார். இந்தப் பிரச்சார பயணத்தில் விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் கையசத்தவாறு சென்றார்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் திருச்சி மாநகர காவல்துறையினர் 27 நிபந்தனைகளுடன் இந்தப் பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0