திருச்சி துறையூரில் ராகுல்; திமுக-காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

Apr 18, 2026 - 16:54
 0  30
திருச்சி துறையூரில் ராகுல்; திமுக-காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

திருச்சி துறையூரில் ராகுல்; திமுக-காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

 

 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 23-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

  அந்தவகையில் இன்று திருச்சி துறையூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விச்சு லெனின் பிரசாரத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை 4.05 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறையூருக்கு 4:30க்கு சென்றடைந்தார்.

  திருச்சி துறையூரில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த 9 வேட்பாளர்களும் பங்கேற்றனர். திருச்சி-துறையூர்-முசிறி பிரிவு சாலை அருகே தனியார் இடத்தில் இன்று 4.30 மணி அளவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையாற்றி வருகிறார் . 

   சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த ராகுல்காந்தியை காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்திற்கு சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். 

   இந்த பொதுக்கூட்ட மேடையில் மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதியில் உள்ள வேட்பாளர்களையும் ராகுல் காந்தி ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

  முன்னதாக, தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் திருச்சியில் பரப்புரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் மற்றும் திமுக கூட்டணி 8 வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார்.

துறையூர் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திருச்சி மேற்கு கே.என்.நேரு, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மணப்பாறை அப்துல் சமது, ஸ்ரீரங்கம் துரைராஜ், முசிறி கருணை ராஜா, லால்குடி பாரிவள்ளல், மண்ணச்சநல்லூர் கதிரவன் ஆகியோரை ஆதரித்து பேசி வருகின்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0