மறைந்த அ.தி.மு.க தலைவர்களை அவமதித்தது தி.மு.கதான் - திருச்சியில் எடப்பாடி 

Apr 13, 2026 - 21:11
 0  22
மறைந்த அ.தி.மு.க தலைவர்களை அவமதித்தது தி.மு.கதான் - திருச்சியில் எடப்பாடி 

மறைந்த அ.தி.மு.க தலைவர்களை அவமதித்தது தி.மு.கதான் - திருச்சியில் எடப்பாடி 

தமிழகத்தில் ஏப்.23-ந் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; அதிமுக ஆட்சி இருந்தபோதே இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது.

ஆனால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருப்பதாகக் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அது அதிமுக ஆட்சி காலத்தில் வந்த சாதனை.

'

'அதிமுக ஆட்சியில் ரூ. 3,500 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன. அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களால் இப்போது தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள தொழில் வளர்ச்சி, பொருளாதார பலன்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் கிடைத்து வருகின்றன. அதிமுக உழைப்புக்கான அறுவடையை மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார்.

மறைந்த தலைவர்களை நான் அவமதிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தலைவர்கள் குறித்து விமர்சித்தால், அதிமுகவும் அந்த வகையிலேயே பதிலடி கொடுக்கும். 

அதிமுகவின் முன்னோடித் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை திமுகவினர் 'மலையாளி' என்றும், பிற மாநிலத்தவர் என்றும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி விமர்சிக்கிறார்கள். திமுகதான் அவமதித்து வருகிறது. காமராஜரை அவமதித்த திருச்சி சிவாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தாரா?

முன்னாள் மத்திய மந்திரி, ஆ ராசா பேசின ஆடியோ வந்ததல்லவா... அதைப் பற்றி நான் கருத்து சொன்னேன். அதற்கு ஸ்டாலின் பொங்கினார் அல்லவா. வீட்டுச் சிறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அடைக்கப்பட்டார் என ராசா சொன்ன செய்தி அந்த ஆடியோ வைத்தான் நான் சொன்னேன். இந்த எடப்பாடி சொல்லவில்லை. ராசா சொன்னதை தான் சொன்னேன். அதிமுக ஆட்சி அமைந்த உடன் ராசா சொன்னது சரியா தவறா என விசாரிக்கப்பட்டு சரியான தண்டனை வழங்கப்படும்.

அப்புறம் இன்னொரு திமுக எம்எல்ஏ, ஒருத்தர் இருக்கார், பணத்தை திருடுவார்கள், நகையை திருடுவார்கள், ஆனால் திமுக ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள்.

திமுக ஆட்சியில் வறுமையே இல்லை என்கிறார் மு.க. ஸ்டாலின். ஆனால், ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருடினார்கள். 

 ஸ்டாலின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியதாக சொல்லியதை எப்படி ஏற்றுக் கொள்வது. தமிழக அரசு விசாரித்த சோதனையில் திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிட்னி திருட்டை முறையாக விசாரித்து சட்டரீதியாக விசாரித்து தவறு இருக்கும் பட்சத்தில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த மருத்துவமனைக்கு சென்று யாராவது சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் இருந்தால் ஸ்கேன் செய்து உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளவும் உங்கள் உறுப்புகள் இருக்கின்றனவா என்று. திமுக மருத்துவமனைக்கு போனா எது எது காணாமல் போகும் என தெரியல. திமுக காரன் மருத்துவமனைக்கு போயிருந்தால் அவர்களை கூட்டிக்கொண்டு மீண்டும் அதிமுக காரர்கள் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்று உடல் உறுப்புகள் சரியாக இருக்கின்றனவா என ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் கிட்னி முறைகேடுகள் நடத்தப்படுகிறது.

கிட்னி முறைகேடில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மருத்துவமனை உரிமையாளர் கைது செய்யப்பட்டாரா? அதிமுக ஆட்சி அமைந்ததும் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றால், உங்கள் உறுப்புகள் இருக்கிறதா? என்று ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். மனசாட்சி உள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தகையவர்களுக்கு கொடுக்கும் தண்டனைதான் நீங்கள் அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு.

பத்திரிகை சுதந்திரத்தை திமுக முடக்குகிறது. திமுக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசுத் திட்டங்களுக்கு கொடுத்த செல்போன் எண்கள் வைத்து முறைகேடு நடத்தப்படுகிறது.

அதிமுக கொண்டுவந்த பல திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ளது திமுக. பல திட்டங்களை ரத்து செய்துவிட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுத்தோம். 5 ஆண்டுகளில் 2 முறை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக. அதை திமுக ஒழித்துவிட்டது.

நகர்ப்புற வளர்ச்சித்துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை ஆதாரத்தை திரட்டி வழக்குப் பதிவு செய்ய முறையிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து 5 ஆண்டுகளில் ரூ. 24 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர். அவர் சிறையில் இருந்து வந்ததை மு.க. ஸ்டாலின் கொண்டாடுகிறார். அவர் சுதந்திர போராட்ட தியாகியா? ஊழல் செய்து உள்ளே சென்றவர் தானே?

மின்சார கட்டணம், குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி ஏன் குப்பைக்கு கூட வரி விதித்துள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த பிரச்னைகள் தீர்க்கப்படும்.

அதிமுக ஆட்சியில் அதிக மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டதாக பள்ளிகளை மூடுகிறார் திமுக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். மக்களுக்காகத்தானே அரசாங்கம். அசாங்கத்திற்காக மக்கள் இல்லையே'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 முன்னதாக, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய எடப்பாடி, திருவெறும்பூர்: ப. குமார் (முன்னாள் எம்.பி) அதிமுக

திருச்சி கிழக்கு : க. ராஜசேகரன் அதிமுக

திருச்சி மேற்கு: எம். ராஜசேகர் அமமுக குக்கர் சின்னம் (கூட்டணி)

ஸ்ரீரங்கம்: ஆர். மனோகரன் (முன்னாள் கொறடா) அதிமுக

மணப்பாறை: டாக்டர் பி.எல். விஜயகுமார் அதிமுக

மண்ணச்சநல்லூர்: ஆர்.வி. பரதன் அதிமுக வின் இரட்டை சின்னம். (சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழகம்)

லால்குடி: எம். லீமா ரோஸ் அதிமுக

முசிறி: என். யோகநாதன் அதிமுக

துறையூர் (தனி): இ. சரோஜா அதிமுக

ஆகியோரை திருச்சி வாக்காளர்கள் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0