கோவிட் காலத்தில் முதலமைச்சர் இல்லாமல் போயிருப்பார் என்று பேசிய எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

Apr 9, 2026 - 09:19
 0  25
கோவிட் காலத்தில் முதலமைச்சர் இல்லாமல் போயிருப்பார் என்று பேசிய எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

கோவிட் காலத்தில் முதலமைச்சர் இல்லாமல் போயிருப்பார் என்று பேசிய எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து, சேலம் காந்தி மைதானம் அருகே திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது ; நமது முதலமைச்சர் தேர்ந்தெடுத்து உங்களது கைகளிலே ஒப்படைத்திருக்ககூடிய வேட்பாளர் லோகநாதன்க்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும் என உங்களை எல்லாம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தேர்தல் நேரத்தில் மக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று தலைநிமிர்ந்து கேட்கிறோம். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு, மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கிறோம்.

கொடுத்த வாக்குறுதிகளோடு, அதற்கு மேலும் திட்டங்களை செய்து தந்திருக்கிறோம் என்ற உரிமையோடு மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கிறோம்.

ஆனால், எதிரணியிலே இருக்கக்கூடியவர்கள், ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி. ஒன்றியத்திலே, டெல்லியிலே இருக்கக்கூடியவர்கள், தமிழ்நாட்டிற்காக நிதியை என்றைக்குமே தருவது கிடையாது. 

நமது பிள்ளைகள் படிக்கிறது வரவேண்டிய, இந்தி படித்தால்தான் கொடுப்பேன் என்று கூறி, நிறுத்தி வைத்திருக்கிருக்கக்கூடிய பிஜேபியோடுதான் எடப்பாடி பழனிசாமி கூட்டணி .

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு எதிரான சட்டங்கள், சிஏஏ,முத்தலாக் என்று எத்தனையோ அவர்களுக்கு எதிரான சட்டங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், ஏன்.. 100நாள் வேலையை நிறுத்தரதுக்கான சட்டங்கள் என இத்தனை சட்டங்களை, இந்திய மக்களுக்கு எதிராக, தமிழ்நாட்டிற்கு எதிராக, மாநிலங்களுக்கு எதிராக உருவாக்கியிருக்கக்கூடிய பிஜேபியோடுதான், இன்று எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருக்கிறார்.

தேர்தலுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி உடைந்துவிட்டது. அப்போ.. நான் பண்ணினதெல்லாம் தப்பு.. இனிமே கூட்டணி கிடையாது என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், இப்பொழுது மறுபடியும் அவங்களோடு கைகோர்த்துக்கொண்டு, அங்கே மேடையிலே நிற்கிறார். எத்தனை பேரைச் சேர்த்து கூட்டணி வைத்தாலும், டேக்-ஆப் ஆகலை. மக்கள் திரும்பிப் பார்க்கக்கூட தயாராக இல்லை. அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.அதனால, எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக்கொண்டு, இங்கே பேசிக்கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து நான் கேட்கிறேன். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறீர்கள். மக்கள் தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறீர்கள். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜன் அவர்கள், நம்முடைய தலைவர் அவர்கள், உங்களுடைய தலைவர்கள் புரட்சித் தலைவர், அம்மையார் ஜெயலலிதா அவர்களும் இருந்த பதவியிலே, இருந்த நீங்கள், இன்றைக்கு தேர்தலில், தேர்தல் பயத்தில் எந்த அளவுக்கு அநாகரீகமாக இறங்கிப் பேச தயாராகிவிட்டீர்கள் என்பதை நினைத்தால், அவமானமாக இருக்கிறது. உங்களுக்காக நான் அவமானப்படுகிறேன். 

தி.நகரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோவிட்-ல் முதலமைச்சர் இல்லாமல் போயிருப்பார் என்று பேசியிருக்கிறார். பழனிசாமி... இது ஒரு தேர்தல்தானே? இவ்வளவு கீழ்த்தரமாகவா இறங்கிப் பேச முடியுமா?. ஒரு தேர்தலுக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சரை, திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரை, எப்படி இன்னொரு மனிதனைப் பார்த்து, நீ கொரோனோவில் இல்லாமல் போயிருப்பாய்னு என்று சொல்லக்கூடிய அளவுக்கு கேவலமாக நீங்கள் இறங்கிவிட்டீர்கள் என்று நினைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டு மக்கள் உங்களைத் தூக்கி எறியக்கூடிய நாள் நெருங்கிவிட்டது. 

நான் ஒன்றுமட்டும் சொல்கிறேன். உங்கள் தரத்திற்கு இறங்கி எங்களுக்கு பேசத் தெரியாது. ஆனால், எங்கள் பரம்பரைக்கு ஒரு கதை இருக்கிறது. சரித்திரம் இருக்கிறது. எங்களை எதிர்த்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தவர்கள் நாங்கள். அதனால, முதலமைச்சர் தளபதி கிட்ட, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின பத்தி என்ன பேசுறீங்கன்னு தெரிந்து பேசுங்கள். 

ஒரு தேர்தலுக்காக எந்தவித நாகரீகத்தையும் காற்றில் பறக்கவிடக்கூடிய ஒருத்தருக்கு, இந்த மண்ணிலே இடமில்லை என்பதை இங்கு இருக்கக்கூடிய மக்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்.

இந்த மண்ணிலே, துரோகம் என்பது அவரது உடம்பிலே ஊறிப்போன ஒன்று. தமிழ்நாட்டிற்கு துரோகம், தன்னை வளர்த்த கட்சிக்கு துரோகம், தன்னோடு இருக்கக்கூடியவர்களுக்கு துரோகம், அதனாலதான், இன்று ஓ.பி.எஸ் அவர்கள் உங்களோடு இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டு, எங்களோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

யார் கால்ல விழுந்து, யாரோட ஆசிர்வாதத்தோட நீங்கள் முதலமைச்சர் ஆனிங்களோ, அந்த அம்மையாருக்கு இன்னிக்கு அதிமுகவில் இடம் இல்லை. அண்ணா திமுக இன்று அமித்ஷா திமுக ஆகிவிட்டது. 

அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, இங்கு வந்து தேர்தலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அந்தத் தேர்தல் வெற்றிக்காக இவ்வளவு கீழ்த்தரமாக, இவ்வளவு கீழே இறங்கி ஒரு மனிதன் பேச முடியுமா என்று எனக்குப் புரியவில்லை. இப்படிப்பட்ட ஒருவருக்கு இனிமேல் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூட யோக்கிதை இல்லை என்ற அந்த நிலையை நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள், மக்களுக்குத் தந்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கக்கூடிய முதலமைச்சர். நம்முடைய ஆட்சியில் பயன்பெறாத ஒரு வீடு கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி நலத்திட்டங்களை அங்க இருக்கக்கூடிய மக்களுக்கான திட்டங்களை செய்து தந்திருக்கக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி.

கோவிட் காலத்தில், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, நீங்கள் மக்களைக் காப்பாற்றவில்லை. திமுக மக்களைக் காப்பாற்றியது. அதிமுக வீட்டுக்கதவைக்கூட தட்டி எங்களது திராவிட முன்னேற்றக்கழகத்தின் உடன்பிறப்புகள், இங்க இருக்கக்கூடிய அத்தனைபேரிடமும் தலைநிமிர்ந்து சொல்கிறேன், எங்களுடைய கிளைக்கழகச் செயலாளர், ஒன்றியக்கழகச் செயலாளர், கழக நிர்வாகிகள், எங்களின் உடன்பிறப்புகள், அதிமுகவினரின் வீட்டுக் கதவுகளைத் தட்டி, உங்களுக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா? என்று கேட்டு பொருட்களை வழங்கிய பெரும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு சேரும்.

உங்களை நம்பி மக்கள் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. நீங்கள் மக்களை எந்தக் காலத்திலும் காப்பாற்றியதில்லை. எடப்பாடி பழனிசாமி அவர்களே.. இந்தத் தேர்தலோடு, உங்களை மக்கள் மறந்துவிடுவார்கள். உங்களுக்கு தமிழ்நாட்டிலே இடம் இல்லை. 

மக்களுக்குத் தந்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்திருக்கக் கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மறுபடியும் முதலமைச்சராக வருவார். 

வரக்கூடிய தேர்தலிலே, இந்த சேலம் தெற்குத் தொகுதியில் வளர்ச்சிப் பணியாக ரூ.42 கோடி மதிப்பீட்டில் அம்மாபேட்டை அரசு புறநகர் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 

அம்மாபேட்டை மேம்பாலம் சுமார் 146 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10 சதவீத அடிப்படை ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு மூலமாக 15ஆயிரம் நெசவாளர்கள் பயன்பெற்றுள்ளார்கள். 

திருமணிமுத்தாறு தூய்மைத் திட்டத்தின் வழியாக ஆற்றின் குறுக்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தடுப்பு சுவர்கள் மற்றும் பாதாள சாக்கடை கட்டும் பணிகளுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இத்தனை வசதிகளையும் செய்து தந்திருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய பெயரால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பெயரால், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர் லோகநாதன் அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி எம்.பி., திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0