விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை செயல்படுத்தி வரும் திமுகவுக்கு எதிராக விவசாயிகள் வாக்களிக்க தீர்மானம்
விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை செயல்படுத்தி வரும் திமுகவுக்கு எதிராக விவசாயிகள் வாக்களிக்க தீர்மானம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மன்னார்குடியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.இ ந்தக் கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் பி..ஆர்.பாண்டியன், மாநில தலைவர் ஆர்.திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர் எஸ். கிருஷ்ணமணி, மாநில துணைச் செயலாளர் வி.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
தீர்மானங்கள் :1)திருச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்கள் கூடி எடுத்த முடிவின் அடிப்படையில் தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை செயல்படுத்தி வரும் கார்ப்பரேட் ஆதரவான கொள்கை கொண்ட திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்கிற வேண்டுகோளை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
2)காவிரி டெல்டாவை பாதுகாப்பதற்கும் விவசாயிகள்
வாழ்வாதாரம் பாதுகாப்பதற்கும் தேர்தல் களம் எதிர்கால திட்டமிடலை உருவாக்கும் வகையில் காவிரி டெல்டாவில் வரும் ஏப்ரல் 18 19 20 தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது.
3)தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான விளைநிலங்களை பாதுகாப்பதற்கும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார். அனைத்து விவசாயிகளையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தீவிர போராட்டத்தில் கலங்கண்டு வருகிறார்.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மீண்டும் பேரழிவு திட்டத்திற்கு அனுமதிக்கும் சுயநல சக்திகளை அடையாளப்படுத்தி போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீது தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்கள் சுயநல சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டு வருகிறது.
குத்தகை விவசாயிகள் விளை நிலங்கள் சிப்காட்டுக்கு அபகரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கும் கோவில்,அ றக்கட்டளைகள் ஆதீனங்களுக்கு சொந்தமான குத்தகை விவசாய நிலங்களின் விவசாயிகள் உரிமைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். கால்நடை பண்ணைகள், வேளாண் பல்கலைக்கழக நிலங்கள் சிப்காட் என்ற பெயரில் அபகரிப்பதை தடுத்து நிறுத்தியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் அவரை சிறைப்படுத்தி ஒடுக்க நினைத்த கார்ப்பரேட் மோகம் கொண்ட தொழில்துறை அமைச்சரும், மன்னார்குடி தொகுதி வேட்பாளருமாண டிஆர்பி ராஜாவுக்கு எதிராக விவசாயிகள் ஒருங்கிணைந்து வாக்களிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுகிறது.
திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், செயலாளர் சரவணன் நாகை மாவட்ட செயலாளர் கருணைநாதன் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் நிழல்தாசன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக மன்னார்குடி ஒன்றிய செயலாளர் பி கே கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0