ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் கே.என்.நேரு 

Apr 3, 2026 - 17:15
 0  36
ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் கே.என்.நேரு 

ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் கே.என்.நேரு 

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வயலூரில் உள்ள தனியார் திருமண திருமண மண்டபத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது;

தமிழகத்தில் நம்முடைய கழகத் தலைவர் தளபதி அவர்கள் முதலமைச்சர் ஆவது உறுதி. தமிழக அரசியலில் ஸ்ரீரங்கம் தொகுதி எப்போதும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் தொகுதியாகவே பார்க்கப்படுகிறது.  

ஸ்ரீரங்கத்தில் கழகம் வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் கழக ஆட்சி அமைவதற்கு சமம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

நம்முடைய வேட்பாளர் துரைராஜ் வெற்றி என்பது, தனிப்பட்ட ஒருவரின் வெற்றியல்ல, அது தலைவர் தளபதி அவர்களின் வெற்றி எனத் தெரிவித்தார். கடந்த முறை போலவே இந்த முறையும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது போல, இந்த முறையும் 9 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைக்க வேண்டும்.

கூட்டணி கட்சிகளின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய அமைச்சர், சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க, சிறிய கட்சிகளாக இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளில் அவர்களின் களப்பணி மிகவும் அவசியமானது. அமைச்சர்களால் செய்ய முடியாத சில பணிகளைக் கூட, உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரால் திறம்பட செய்ய முடியும் என்பதால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக, கழகத் தோழர்கள் அணுக வேண்டிய வாக்காளர்களைச் சரியாகக் கண்டறிந்து, கழகத்தின் திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைத் திரட்டி, ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுக்க வேண்டும்.

எதிரிகள் யாராக இருந்தாலும், நம்முடைய ஒற்றுமையும், உழைப்பும் அவர்களை வீழ்த்தும். எனவே, ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் துரைராஜ்யை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, கோட்டையில் தளபதியின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என பேசினார்.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர்கள் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0