அமெரிக்​கா- ஈரான் போர்; பாட்டில் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு; குடிநீர் கேன் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அவதி

Mar 19, 2026 - 14:16
 0  25
அமெரிக்​கா- ஈரான் போர்; பாட்டில் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு; குடிநீர் கேன் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அவதி

அமெரிக்​கா- ஈரான் போர்; பாட்டில் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு; குடிநீர் கேன் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அவதி

   

அமெரிக்​கா- ஈரான் போர் காரண​மாக பிளாஸ்டிக் மூலப்​பொருட்​கள் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. போர் தொடங்கிய நாள் முதல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியது. இதனால், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அதன் மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் நாற்காலிகள், வாகன சக்கரங்களுக்கான டயர்கள், சிந்தடிக் சேலைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட 6000க்கும் மேற்பட்ட பொருள்களின் விலையும் உயர தொடங்கி விட்டது.
   போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் பிளாஸ்​டிக் பாட்​டில்​கள் விலை அதிகரித்​துள்​ளது. இதனால் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்க்கப்படும் குடிநீரின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், பாமரர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
\   குறிப்​பாக 1 லி. குடிநீர் பாட்​டில் விலை லிட்​டருக்கு ரூ.5 உயர்ந்​துள்​ளது. இந்தப் போரால் பிளாஸ்​டிக் பொருட்​கள் தயாரிக்​க தேவைப்​படும் மூலப்​பொருட்​களுக்​கும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால், அவற்​றின் விலை​யும் கணிச​மாக உயர்ந்​துள்​ளது.
   பொது​வாக, பிளாஸ்​டிக் பொருட்​கள் தயாரிக்க கச்சா எண்​ணெய்​யில் இருந்து தயாரிக்​கப்​படும் பெட்ரோ ரசாயன பொருட்​கள் பயன்​படுத்​தப்​படும். தற்​போது அமெரிக்​கா- ஈரான் போரால் அதற்​கும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால் பிளாஸ்​டிக் பொருட்​கள் உற்​பத்தி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.
   இதன்படி பாலி எத்​திலீன், பிவிசி, பாலிபுரோப்​பிலீன், பாலிஸ்​டிரீன் போன்​றவற்​றின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்​துள்​ளது. இதையடுத்​து, மினரல் வாட்​டர் பாட்​டில், வீட்டு உபயோக பிளாஸ்​டிக் பொருட்​கள், மருத்​துவ பிளாஸ்​டிக் பொருட்​கள் போன்​றவற்​றின் விலை அதி​கரித்​துள்​ளது.
  குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்க பயன்படும் கண்ணாடி போன்ற மினுமினுப்பு தன்மை கொண்ட பாலி எத்திலீன் டெரெப்தலேட் விலை ஒரு கிலோ ரூ.123-ல் இருந்து ரூ.210 ஆக உயர்ந்துவிட்டது. பேக்​கிங் பிளாஸ்​டிக் பேப்​பர் விலை கிலோ ரூ.140-ல் இருந்து ரூ.240 ஆக உயர்ந்​து​விட்​டது.
   இதனால் திருச்சி மாநகரில் ரூ.8-க்கு விற்​பனை செய்​யப்​பட்​ட 200 மில்லி லிட்​டர் குடிநீர் பாட்​டில் விலை இன்று ரூ.10-க்​கும், ரூ.10-க்கு விற்​கப்பட்ட 300 மிலி குடிநீர் பாட்​டில் ரூ.12-க்​கும், ரூ.12-க்கு விற்​பனையான 500 மிலி குடிநீர் பாட்​டில் ரூ.16-க்​கும், ரூ.20-க்கு விற்​பனை செய்யப்​பட்​ட ஒரு லிட்​டர் பாட்​டில் ரூ.25-க்​கும், ரூ.30-க்கு விற்ற 2 லிட்​டர் பாட்​டில் ரூ.35-க்​கும், ரூ.50-க்கு விற்​பனையான 5 லிட்​டர் குடிநீர் பாட்​டில் ரூ.70-க்​கும், மறு​முறை பயன்​படுத்​தப்​படும் கேன்​களில் அடைக்​கப்​பட்ட 20 லிட்​டர் குடிநீர் ரூ.45-ல் இருந்து ரூ.55-க்​கும் விற்​பனை செய்​யப்​படு​கிறது.
   கோடை காலம் தொடங்கிய நிலை​யில், போர் தொடரும்​ பட்​சத்​தில் இந்த விலை​யேற்​ற​மும் தொடரும் என்று தமிழ்​நாடு அடைக்​கப்​பட்ட குடிநீர் உற்​பத்​தி​யாளர் சங்​கத்​தினர் தெரி​வித்​துள்​ளனர்.
   இதுகுறித்து அச்சங்​கத் தலை​வர் கண்​ணன் கூறும்​போது, ஒரு​முறை குடிநீர் பாட்டிலின் விலையை உயர்த்​தி​னால் அடுத்த 4 ஆண்​டு​களுக்கு அந்த விலை​யேற்​றம் நிலை​யான​தாக இருக்​கும். ஆனால் தற்​போதைய நிலை​யில், மூலப்​பொருள்​களின் தொடர் விலை​யேற்​றத்​தால் 4 நாட்​களுக்கு ஒரு முறை குடிநீர் பாட்​டில்​களின் விலையை உயர்த்​த வேண்​டி​ய சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
   குடிநீரை அடைத்து விற்​பனை செய்​யும் தொழிலை பாது​காக்க பிளாஸ்​டிக் பாட்​டில்​களை மத்​திய, மாநில அரசுகள் கொள்​முதல் செய்ய வேண்​டும். நியாய​மான நிலை​யான விலை​யில் பாட்​டில் குடிநீர் பொது​மக்​களுக்கு தடை​யின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.
  அதற்​கும் மேலாக பிளாஸ்​டிக் பாட்​டில்​கள், மூடிகள் தயாரிப்​ப​தற்கு உரிய மூலப்​பொருட்​களை தங்கு தடை​யின்றி கிடைக்க வழி​வகை செய்ய வேண்​டும் என்​றார்.
  குடிநீர் பாட்டில் விலை உயர்வு குறித்து பேசிய கல்லூரி மாணவர் ஒருவர், போர் ஒன்றை காரணம் காட்டி எல்லாமே உயருது, சமையல் எரிவாயு கிடைப்பதில்லை. கல்லூரி விடுதிகளில் உணவு தயாரிப்பில் பல்வேறு மாற்றங்களை நிர்வாகம் செய்துள்ளது. இதனால் நாங்கள் விரும்பிய உணவை எடுத்துக்கொள்ள முடியவில்லை. 
 திருச்சியில் உள்ள சாலையோரக் கடைகளை நம்பிதான் கல்லூரி மாணவர்கள், தனியார் ஊழியர்கள் இருக்கின்றனர். இந்தநிலையில் சிலிண்டர் தட்டுப்பாடால் சாலையோரக் கடைகளில் பெரும்பாலானவை பூட்டப்பட்டு விட்டது. கல்லூரி விடுதி மட்டுமல்லாது, திறந்திருக்கும் ஒருசில சாலையோரக் கடைகளிலும் உணவு விலை ஏறியுள்ளது. உணவு விலை ஒருபக்கம் என்றால், தாகத்திற்கு குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்க சென்றால் அதன் விலையும் அதிகரித்துள்ளது என்னைப்போன்ற சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0