பிரதமர் மோடி திருச்சி வருகையை கண்டித்து எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
பிரதமர் மோடி திருச்சி வருகையை கண்டித்து எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
இந்திய மக்களை வஞ்சிக்கும் நோக்கில் சமையல் எரிவாயு விலையினை ஏற்றி, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டினை உருவாக்கி பொதுமக்களை அவதிக்கு உள்ளாக்கிய மத்திய அரசின் ஆளுமை பிரதமர் மோடி திருச்சி வருகையை கண்டித்து மாநகர் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முரளி, கோட்ட தலைவர்கள் திருவனைக்கோவில் தர்மேஷ், வரகனேரி இஸ்மாயில், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணியபுரம் எட்வின், உறையூர் பாக்யராஜ், தில்லை நகர் ராகவேந்திரா, புத்தூர் மலர் வெங்கடேஷ், ரீகன், விமல்,அணி தலைவர்கள் கலை பிரிவு அருள், சுப்புபாஜ், எஸ்சி பிரிவு கலியபெருமாள், இந்திரா தோழி மாரீஸ்வரி, மனித உரிமை பிரிவு ஆறுமுகம், ஜாவகர்பால்மன்ச் எபினேசர், கம்பரசம்பேட்டை தர்மராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டு கண்டன பதாகைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0