ரூ.5000 லஞ்சம் ; திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி வேட்டையில் சிக்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

Mar 4, 2026 - 18:57
 0  221
ரூ.5000 லஞ்சம் ; திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி வேட்டையில் சிக்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

ரூ.5000 லஞ்சம் ; திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி வேட்டையில் சிக்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் பார்த்திபன் என்பவர் உதவி மின்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில், திருச்சி மாவட்டம், டி.இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தமது விவசாய நிலத்திற்கு அரசால் வழங்கப்படும் இலவச மின் இணைப்பை வழங்கிட மருங்காபுரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை நாடியுள்ளார். அப்போது உதவி உதவி மின் பொறியாளர் பார்த்திபன் என்பவர் இலவச மின்சாரத்திற்கு ரூ.10000/- கையூட்டு கேட்டு, பின்னர் குறைத்துக் கொண்டு ரூ.5,000/- ஆக லஞ்சம் கேட்டுள்ளார்.

 இதனைக் கொடுக்க விரும்பாத மாரியப்பன் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் பொறிவைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்று நண்பகல் மருங்காபுரி உதவி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் பார்த்திபன் மாரியப்பன் இடம் இருந்து ரூபாய் 5000 கையூட்டு பெரும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.

இந்த பொறிவைப்பு நடவடிக்கையில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர்ராணி, பாலமுருகன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும் மருங்காபுரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் தீவிர சோதனையையும் நடத்தி வருகின்றனர் ஊழல் தடுப்பு காவல் துறையினர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0