கனிமொழி எம்.பி தலைமையில் சட்டமன்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தொடக்கம்
கனிமொழி எம்.பி தலைமையில் சட்டமன்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தொடக்கம்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டலின்படி, 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில், டி.கே.எஸ்.இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ், சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய குழு பயணம் செய்து பொதுமக்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை அளிக்கவுள்ளனர்.
அதன்படி, இன்று (19/01/2026) சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸில் தொடங்கியது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கருத்து கேட்பு கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0