கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி மாணவி

Jan 6, 2026 - 17:26
Jan 6, 2026 - 17:28
 0  22
கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி மாணவி

கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி மாணவி 

தமிழ்நாடு கராத்தே சாம்பியன்ஷிப் 43-ஆவது விளையாட்டுப்போட்டி சென்னை சாந்தோம் மான்ஃபோர்ட் பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் எம்பி மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இப்போட்டியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமியில் மாஸ்டர் சுதாகரிடம் பயிற்சி பெற்ற 60 மாணவிகள் கலந்து கொண்டனர். 

தமிழக அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மான்ஃபோர்ட் பள்ளி மாணவி கமலயாழினி 54 எடை பிரிவில் வெண்கலம் வென்று திருச்சிக்கு பெருமை சேர்த்தார்.

இதனை அறிந்த பள்ளி முதல்வர், கராத்தே பயிற்சியாளர் மாஸ்டர் சுதாகர், மாணவர்கள், மாணவியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கமல யாழினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0