திருப்பத்தூர் அருகே கோர விபத்து; அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 11 பேர் பலி; மீட்புப் பணியில் போலீசார்

Nov 30, 2025 - 18:43
 0  126
திருப்பத்தூர் அருகே கோர விபத்து; அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்;  11 பேர் பலி; மீட்புப் பணியில் போலீசார்

திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதல்; 11 பேர் பலி; மீட்புப் பணியில் போலீசார்

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் கும்மங்குடி பாலம் அருகே திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில்.சம்பவ இடத்தில் டிரைவர் உட்பட 8 பேர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆகியது. மேலும் 40 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்து திருப்பத்தூர் மதுரை காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில், காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற (TN 39 N 0198) அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (TN 63 N 1776) அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று மாலை விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 11 நபர்கள் இறந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயம்பட்ட நபர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்ட நபர்களை மீட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். 

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0