திருச்சியில் காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை அடைத்தும், திறந்தும் போராட்டம்

Nov 25, 2025 - 15:53
 0  120
திருச்சியில் காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை அடைத்தும், திறந்தும் போராட்டம்

திருச்சியில் காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை அடைத்தும், திறந்தும் போராட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் திருச்சியில் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை, வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பாட்டில்களை சேமித்து வைக்க இடம், வாங்கப்படும் பாட்டில்களை கையாளுவதற்கான பயிற்சி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் மதுபான கடைகளில் ரூ.10 அதிகமாக மது பானங்கள் விற்கப்பட்டன. காலி பாட்டிலை மறுபடியும் மதுக்கடைகளில் தந்து, 10 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது, MRP எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையுடன், கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், மலைப்பகுதிகள் மட்டுமல்லாமல் 9 மாவட்ட மதுபானக்கடைகளிலும், அடுத்து 7 மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டது. 

மேலும், நீதிமன்ற உத்தரவின் படி, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. 

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், பணியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

முன்னதாக, அனைத்து சில்லரை மதுபானம் விற்பனை கடைகளில், காலி மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால், 10 ரூபாய் கொடுக்கும் திட்டம் திருச்சி மாவட்டத்தில் நடைமுறைக்கு வருவதாக ஆட்சியர் சரவணன் அறிவித்திருந்த நிலையில், திருச்சி டாஸ்மாக் பணியாளர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்சி, டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலகத்தை, டாஸ்மாக் பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, இன்று முதல் திருச்சி மாவட்டத்தில் காலி மதுபான பாட்டிலுக்கு ரூ.10 திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி டாஸ்மாக் ஊழியர்களின் ஒரு பகுதியினர் கடைகளை மூடி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் நண்பகல் திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் டாஸ்மாக் மண்டல அலுவலர் போராட்டம் நடத்தியவர்களுடன், விரைவில் உங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்து கடைகளை திறக்க அறிவுறுத்தினார். சில பகுதிகளில் ஊழியர்கள் டாஸ்மாக் கடைகளை திறந்தனர். திறந்தவர்கள் மது பிரியர்கள் கொண்டு வந்து கொடுத்த காலி மதுபான பாட்டிலை வாங்க மறுத்தனர். சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முடியே இருந்தது. இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டங்கள் குறித்து டாஸ்மாக் பணியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தெரிவிக்கையில்; சுற்றுலாத்தலங்களில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவது என்பதற்காக திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி படிப்படியாக இதனை அனைத்து மாவட்டங்களிலும் அமல் படுத்தி வருகின்றனர். 

ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் Poc மற்றும் ஸ்கேனர்கள் பயன்படுத்துவதில்லை. நாங்க இவற்றை பயன்படுத்தி வருகிறோம்.

மேலும், ஆள் பற்றாக்குறை உள்ளது என்பதை முதுநிலை மண்டல மேலாளரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். காலி மதுபான பாட்டில்களை தமிழக அரசு திரும்பப் பெறவில்லை. அப்பணியை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். எனவே தனியார் நிறுவனத்திலிருந்து ஆட்கள் பெற்றுக் கொள்ளும்படியான பணியை செய்ய வேண்டும்.

ஏற்கனவே எங்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையும், இடவசதி இல்லை. தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைக்கு தயாராக உள்ளோம் என தெரிவித்தார்

.க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0