10 பேராக மட்டுமல்ல 10 ஆண்டுகளாகவே ஒரு வளமான, வலுவான கூட்டணியை நாங்கள் கட்டமைத்துள்ளோம் - அண்ணாமலைக்கு அன்பில் மகேஷ் பதிலடி

Nov 23, 2025 - 15:26
 0  25
10 பேராக மட்டுமல்ல 10 ஆண்டுகளாகவே ஒரு வளமான, வலுவான கூட்டணியை நாங்கள் கட்டமைத்துள்ளோம் - அண்ணாமலைக்கு அன்பில் மகேஷ் பதிலடி

10 பேராக மட்டுமல்ல 10 ஆண்டுகளாகவே ஒரு வளமான, வலுவான கூட்டணியை நாங்கள் கட்டமைத்துள்ளோம் - அண்ணாமலைக்கு அன்பில் மகேஷ் பதிலடி

  தமிழ்நாடு அரசு மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக காவிரி கரையில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்து மீன் குஞ்சுகளை காவிரி ஆற்றில் விட்டார். இது குறித்த விபரம் வருமாறு;

மீன்வளம் ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின்படி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டிற்கு ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்தல் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் காவேரி ஆற்றில் 60,000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்யப்பட்டது.

மேலும், இத்திட்டமானது நாட்டின மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாக, இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினைமீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் தூண்டுதல் முறையில் பெருவிரலிகளாக வளர்க்கப்பட்டு 60 ஆயிரம் எண்ணிக்கையிலான மீன்குஞ்சு பெருவிரலிகள் திருச்சி காவேரி ஆற்றில் இருப்பு செய்யப்பட்டது. மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும், ஆறுகளின் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை , (Sustainable Stock Maintenance of Native Fish Species in River System) ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் பயன்படுகிறது.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் மாமன்ற உறுப்பினர் தங்கலட்சுமி, திருச்சி (மண்டல) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருச்சி மற்றும் கரூர் (இருப்பு) திருச்சி, இதர அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், கிராம பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அன்பில் மகேஷ் பொய்யாமொழி;முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி ஆற்றுப்பகுதியில் மீன்களின் வளத்தை பேணி காக்கின்ற வகையில், இயற்கையின் சார்ந்துள்ள இது போன்ற பணிகளில் நாங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம் என்பதால் இதனை செய்து வருகிறோம்.

டெட் தேர்வில் ஆசிரியர்களின் முதன்மை பாடத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்களே என கேட்டபோது…. ஆசிரிய சங்கத்தை சார்ந்தவர்களும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை கூறியுள்ளனர் கூட்டத்திற்கு பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம் மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரை கூட விட்டு விடாமல் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் என்ன பணி செய்ய முடியுமோ அதை செய்வோம்.

இந்த விஷயத்தில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே தமிழக முதல்வர் எடுக்கும் இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய நன்மை செய்தியாக அமையும் என்றார்.

உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலேட்ஜ் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளாரே என கேட்டபோது…. அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான்…. இன்று இளைய சமுதாயம் சார்ந்து பல்வேறு விதத்தில் ஸ்கில் டெவலப்மெண்ட் (Skill Development) சார்ந்து துணை முதலமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளை பாருங்கள், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலர் சேர்ந்துள்ளனர் என்றால் அதற்கு அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பில் கொண்டு போய் அவர்களை அமர வைப்பதற்கு ஸ்கில் டெவலப்மெண்ட் தேவை. நான் முதல்வன் திட்டம் சார்ந்தெல்லாம் அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.

திட்டம் கொண்டு வருவதில் மட்டுமல்ல, அதை தொடர்ந்து கண்காணித்து அதற்கு நல்ல ரிசல்ட் அவர் கொடுத்துள்ளார். அதேபோல் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நானும் கற்றுக்கொண்டு தான் உள்ளேன்.

நிறைய சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகின்ற வகையில் இன்னொரு இளைஞரை இது போல் இன்னொரு இளைஞர் சொல்வது வருத்தமளிக்கிறது.

10 பேர் கூட்டணியில் இருந்தாலும் எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணி என அண்ணாமலை கூறியுள்ளாரே என கேட்டபோது, அரசியல் சார்ந்து இன்னொரு 4 மாதத்தில் இது தெரிந்து விடும்.

நான் ஆரம்பத்தில் இருந்து கூறியது போல தான் 10 பேராக மட்டுமல்ல 10 ஆண்டுகளாகவே ஒரு வளமான, வலுவான கூட்டணியை நாங்கள் தொடர்ந்து கொண்டுள்ளோம்.

அதில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர். அதற்கான வழி வகையை தமிழக முதல்வர் விடமாட்டார் என்றார்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0