‘அள்ளி’ கொடுக்கும் திமுக! ‘கிள்ளி’ கொடுக்காத அ.தி.மு.க.!
‘அள்ளி’ கொடுக்கும் திமுக! ‘கிள்ளி’ கொடுக்காத அ.தி.மு.க.!
2026 சட்மன்றத் தேர்தலுக்கு தி.மு.க. முழுவீச்சில் களத்தில் இறங்கிவிட்டது. தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்க மாப்பிள்ளையின் ‘பென்’ அமைப்பு, சுனில் என வரிசை கட்டி நிற்கின்றனர்.
அ.தி.மு.க. ஆந்திராவைச் சேர்ந்த ‘பிரமான்யா’ எனும் நிறுவனத்துடன் பல நூறுகோடிக்கு தேர்தல் வியூகம் வகுக்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரை ஆலோசகராகவும் வைத்திருக்கிறது.
2026 சட்டமன்றத்தேர்தலில் தனி மெஜாரிட்டி பெருவதற்காக தங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட தி.மு.க.வினர் முன்னணி ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு ‘அள்ளி’ கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அ.தி.மு.க.வுக்கு ஆலோசனை வழங்கும் ‘பிரமான்யா’ நிறுவனத்திற்காக செயல்படும் பத்திரிகையாளர் ஒருவர் ‘கையில் பெற்றுக்கொண்டு’ ‘கையை கட்டிக்’ கொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.
ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அந்த பத்திரிகையாரை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது பிரமான்யா நிறுவனம். அவரோ, அள்ளிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கிள்ளியாவது கொடுக்கக்கூட அவருக்கு மனம் வரவில்லை என்கிறார்கள் முன்னணி செய்தி நிறுவனங்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0