சவுதி அரேபியாவில் விபத்து; உம்ரா பயணம் சென்ற 42 இந்தியர்கள் பலி
சவுதி அரேபியாவில் விபத்து; உம்ரா பயணம் சென்ற 42 இந்தியர்கள் பலி
சவுதி அரேபியா மதீனாவில் இன்று அதிகாலை புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் பயணித்த பஸ்சும் டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 20 பெண்கள், 11 குழந்தைகள் என 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலியானவர்கள் தெலுங்கானா மற்றும் ஐதராபத்தை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவின் மதீனா அருகே அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்தில் சிக்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இந்திய புனித பயணிகள் 42 பேர் பலியாகி உள்ளனர். இதில் 20 பெண்கள், 11 குழந்தைகளும் அடங்குவர். விபத்து ஏற்படும் போது பெரும்பாலான பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்ததாக சொல்லபடுகிறது. விபத்தில் பலியானவர்கள் தெலுங்கானா மற்றும் ஐதராபத்தை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருந்தில் இருந்த பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இலவச அவசர தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சவுதி அரேபியா தூதருடன் பேசி தனி விமான மூலம் பலியான 42 பேரையும் இந்தியா கொண்டுவர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0