மாநகராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்; மேயர், ஆணையர் துவக்கி வைப்பு
மாநகராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்; மேயர், ஆணையர் துவக்கி வைப்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும், TMRT 108 என்ற அமைப்பும் இணைந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் ஆகியோர் துவக்கி வைத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள், பரிசோதனைகளை பார்வையிட்டார்கள்.
இம்முகாமின் நோக்கம், திருச்சி மாநகராட்சி ஊழியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடவும், பணியாளர்கள் தினசரி சேவைகளை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் செயல்படுத்திட இந்த மருத்துவ முகாம் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் இன்று நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பல பிரிவுகளில் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொது மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை, எலும்பு அடர்த்தி பரிசோதனை, சர்க்கரை நோய் (Diabetic) பரிசோதனை, பல் பரிசோதனை (Dental Check-up) இலவச ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மாநகராட்சி பணியாளர்களுக்கு செய்யப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் மாநகராட்சி நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி, மருத்துவர்கள் பிரவீன் கிருஷ்ணகுமார், வருண் பிரசன்னா, ரோஷன், அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளை செய்தனர்.
இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை TMRT 108 அமைப்பின் அலுவலகத் தலைமைப் பொறுப்பாளர்கள் பிரேம் குமார், விமல்ராஜ், இனியன் அமுதன் உள்ளிட்டோ செய்திருந்தனர்.
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0