டெல்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு 12 பேர் பலி; 35 பேர் படுகாயம்: தமிழகத்தில் போலீசார் உஷார்

Nov 10, 2025 - 22:01
Nov 10, 2025 - 23:14
 0  84
டெல்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு 12 பேர் பலி; 35 பேர் படுகாயம்: தமிழகத்தில் போலீசார் உஷார்

டெல்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு 12 பேர் பலி; 35 பேர் உயிர் ஊசல்: தமிழகத்தில் போலீசார் உஷார்

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில், 12 நபர்கள் பலியானதாகவும், 6 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோ மற்றும் ஒரு வேன் தீயில் எரிந்து சேதமானதாகவும் கூறப்படுகிறது.

செங்கோட்டை மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததால் தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் தெரு வியாபாரிகள் இறந்திருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

உஷார் நிலையில் தமிழ்நாடு டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய மால்கள், மார்கெட் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக தலைநகா் டெல்லியில் மிகப்பொிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தில் பெண் மருத்துவா் கைது செய்யப்பட்டார். 300 கிலோ வெடிபொருட்களுடன் ஆண் மருத்துவா்கள் கைதான நிலையில் உடன் பணியாற்றிய பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் வெடிப்பொருட்களுடன் 7 பேர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், இப்படி ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், பீகார் தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0