அதிமுகவின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
அதிமுகவின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இயங்கி வருபவராக அறியப்படுகிறார். கடந்த செப்டம்பர் மாதம், 'பத்து நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென' செங்கோட்டையன் கெடு விதித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, கெடு விதித்த மறுநாளே கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக கட்சியில் வகித்து வந்த பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட வேறு சிலரையும் அவர்களுடைய கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அப்போது அறிவிப்பு வெளியிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கை முழு விபரம்;
"அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக" எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0