திருச்சியில் நாளை "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சியில் நாளை "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை மாமல்லபுரத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நாளை 30-ம் தேதி மாலை 04:00 மணியளவில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் இடம் ஆலோசனை நடத்துகிறார்.
எனவே, இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகர, நகர, பேரூர் வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0