மும்மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தீபாவளி பரிசு;125 நபர்களுக்கு நடமாடும் காய்கறி வண்டி- அசத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

Oct 18, 2025 - 15:43
Oct 18, 2025 - 15:44
 0  36
மும்மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தீபாவளி பரிசு;125 நபர்களுக்கு நடமாடும் காய்கறி வண்டி- அசத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

மும்மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தீபாவளி பரிசு;125 நபர்களுக்கு நடமாடும் காய்கறி வண்டி- அசத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பாக, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுமார் 125 நபர்களுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரக் திமுக செயலாளர் மு.மதிவாணன், கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, பகுதி கழகச் செயலாளர் மோகன், தோட்டக்கலைத் துறையின் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்‌.

முன்னதாக, திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மும்மதங்களைச் சேர்ந்த பெரியோர்களை அழைத்து அவர்களுக்கு தீபாவளி பண்டிகை சிறப்பு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0