கரூர் பெருந்துயரம்; 16-ம் நாள் காரியம் முடிந்த பிறகு உண்மைகளை நாங்கள் சொல்வோம்- ஆதவ் அர்ஜுனா
கரூர் பெருந்துயரம்; 16-ம் நாள் காரியம் முடிந்த பிறகு உண்மைகளை நாங்கள் சொல்வோம்- ஆதவ் அர்ஜுனா
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் கண்டிப்பாக வெளியே சொல்வோம் என தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று இரவு தெரிவித்தார்.
கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக டெல்லி சென்ற ஆதவ் அர்ஜூனா டெல்லியிலிருந்து இன்றிரவு சென்னை வந்திறங்கினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, "பொதுவாக நம்ம வீட்டுல மிகப்பெரிய இழப்பு ஏற்படும் போது 16 நாள்கள் மிகப்பெரிய துக்க நாள்களாக வலியில் இருப்போம்.
16-ம் நாள் காரியம் முடியும் வரைக்கும் யாரும் பேச முடியாத அளவுக்கு மிகுந்த வலியோடு நாங்கள் இருக்கிறோம். நாளை 16-ம் நாள் காரியம். அது முடிந்த பிறகு உண்மைகளை நாங்கள் சொல்வோம்.
கட்சியை முடக்க வேண்டும் என்று நினைக்கும்போது எங்கள் தலைவர் ஒரு சாமானிய மனிதனின் நம்பிக்கையாக நீதித்துறையை நாடியிருக்கிறார்.
உண்மையை வெளிக்கொண்டுவருவதற்காக எங்களுடைய போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.
16-ம் நாள் காரியம் முடிந்ததும் அந்த மக்களை சந்திப்பதற்கான பயணத் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சாமானியர்களாக காத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை வெளியே வரும்" என்று கூறினார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0