எடப்பாடி பழனிச்சாமியை 2026 தேர்தலில் வீழ்த்தாமல் அம்மா மக்கள் முன்னேற்ற மக்கள் கட்சி ஓயாது.- திருச்சியில் டிடிவி
எடப்பாடி பழனிச்சாமியை 2026 தேர்தலில் வீழ்த்தாமல் அம்மா மக்கள் முன்னேற்ற மக்கள் கட்சி ஓயாது.- திருச்சியில் டிடிவி
திருவெறும்பூர் தொகுதி அம முக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;
திருவெறும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தற்பொழுது நாங்கள் வந்துள்ளோம். உங்களை நம்பி வந்த 18 எம்எல்ஏக்களின் அரசியல் எதிர்காலத்தை அனாதையாக ஆக்கிவிட்டதாக ஆர்.பி உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளது குறித்து கேட்டதற்கு அது ஏதாவது மார்ப்பிங்காக இருக்கலாம், நீங்க பார்த்தீர்களா செய்தியாளர்களை சந்தித்து இது கூறினாரா?
இது என்ன சந்தன கடத்தல் வீரப்பன் போல வீடியோ வெளியிட்டு உள்ளாரா அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் உண்மையை தான் சொல்லுவாரு.
15 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்.
சதுரகிரிமலையில் எது ஆர்பி உதயகுமார் பிடித்து வைத்துள்ளார்களா அவர் தவறாக சொல்ல மாட்டாரே சரியா தான் கூறுவார் நன்றாக பாருங்கள்
உதயகுமாரே இதையெல்லாம் சொல்லி இருந்தாலும் உங்கள் நேரத்தையும் எனது நேரத்தையும் வீணாக்க வேண்டாம்.
செய்தியாளர்கள் சந்தித்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லலாம். சந்தன கடத்தல் வீரப்பன் போல் வீடியோ வெளியிடுபவர்களுக்கு அல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது அதிமுக இல்லை புரட்சித்தலைவர் கட்டமைத்த அடிப்படை விதிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி அந்த கட்சியை இடிஎம்கே வாக மாற்றிவிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமியை இந்த தேர்தலில் வீழ்த்தாமல் அம்மா மக்கள் முன்னேற்ற மக்கள் கட்சி ஓயாது.
தனி நபராக இருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படி அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தோமோ அது போல் வருங்காலத்தில் அரசியலில் துரோகம் என்ற வார்த்தையே நினைக்கக் கூடாது என்று நினைக்கக் கூடிய அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும்.
போனமுறை துரோகத்தை வீழ்த்துவது தான் திமுக ஆட்சிக்கு வந்தது உண்மைதான் எந்த முறை அப்படி சொல்ல முடியாது அமமுக கூட்டணி அமைக்கும் கட்சிதான் ஆட்சிக்கு வரும்.
அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உள்ளது, ஆனால் நாங்கள் அமமுக.
புரட்சித் தலைவர் மற்றும் அம்மா கொண்டு வந்த சட்ட விதியின் மூலம் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், ஆனால் இபிஎஸ் அந்த சட்ட விதியை மாற்றிவிட்டார். இது அம்மா கட்டமைத்த கட்சி கிடையாது.
பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்றால்
10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும், 10 எம்எல்ஏக்கள் வழிமொழிய வேண்டும் எனஎடப்பாடி பழனிச்சாமி மாற்றி உள்ளார்.
இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்தி உண்மையான அம்மா தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும்.
அம்மாவின் கட்சியை மீட்டெடுப்போம், அம்மாவின் அண்ணா திமுகவின் மீட்டெடுப்போம் என்ற அந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம். துரோகத்தை வீழ்த்துவதற்கு நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்.
நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சிக்கு வரும்.
கரூரில் நடந்தது துயர சம்பவத்திற்கு விஜயும் அவரது கட்சியோ பொறுப்பல்ல அது ஒரு விபத்து. ஆனால் தார்மீக பொறுப்பு என்று ஒன்று உள்ளது, அதனால் அதன் அந்தகூட்டத்திற்கு அனுமதி கேட்டு நடத்தியவர்களும் அதன் கட்சியின் தலைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
குற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை, பொறுப்பை மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம்.
தவேக பிரச்சார கூட்டத்தில் நடந்த விபத்திறகு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்றிருந்தால் நீதிமன்றம் இந்த கண்டனத்தையும் கருத்தையும் தெரிவித்திருக்காது.
தார்மீக பொறுப்பு என்பது குற்றத்தை ஒத்துக் கொள்வது அல்ல,
திமுகவிற்கு தினகரன் ஓவராக சப்போர்ட் செய்கிறார் என சில நாளிதழ்களில் எழுதி உள்ளனர் என்ற கேள்விக்கு, அது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. தமிழக முதல்வர் சரியாகவும், மிகவும் நிதானமாகவும் செயல்படுகிறார்.
கரூர் விபத்திற்கு விஜயை கைது செய்தால் ஒரு தவறான முன் உதாரணமாக மாறிவிடும் எல்லா கட்சிகளும் கூட்டம், ரோட் சோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவோம், அதில் விபத்து நடப்பது இயல்பு. அதற்கு தார்மீக பொறுப்பு தான் ஏற்க முடியுமே ஒழிய குற்றவாளியாக அவர்களை ஆக்க முடியாது.
காவல்துறை உஷாராக இருந்தாலும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக அந்த கட்சித் தலைவரை குற்றம் சாட்டுவது தவறு அதை தான் முதல்வரும் உணர்ந்துள்ளார். அவருக்கு 50 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அனுபவ மிக்க தலைவராக உள்ளார்.
எதிர்க்கட்சியினர்
விடும் சவால்களை பெரிது படுத்தாமல் அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் நிதானமாக செயல்படுகிறார். மற்றவர்கள் கூறுவது போல் நடந்தால் அது திமுகவையும் பாதிக்கும். மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இது பாதிக்கும் தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கும் என தமிழக முதல்வர் நினைக்கிறார் என கூறுவதில் என்ன தவறு உள்ளது, அதற்கு நான் சப்போர்ட் செய்வதாக கூறுகின்றனர். நியாயமாக பேசினால் சப்போர்ட் என்று கூறுவதா? எழவு விழுந்த வீடுகளில் கடந்த ஒரு வார காலமாக துயரத்தில் இருப்பார்கள். ஆனால், கூட்டணி பற்றி பேசினால் அவர்கள் என்ன நினைப்பார்கள், கூட்டணி பேசுவதற்கு இதுவா நேரம் அந்த ஒரு நாகரிகம் கூட இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தவெகவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார்.
நீங்கள் தவெக, சிலோன், ஆந்திரா உள்ள கட்சிகளில் உடன் கூட கூட்டணி போங்கள், அது எங்களுக்கு தேவையில்லை, அது உங்களின் உரிமை, உங்களால் தனியா ஒன்னும் முடியாது, இந்த நேரத்தில் தவெகவை கூட்டணிக்கு வர வேண்டும் என குள்ளநரித்தனமாக ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அழைக்கிறீர்கள். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களை குருவியை சுடுவது போல் சுட்டார்களே அந்த துறைக்கு அப்பொழுது நீங்கள் தானே அமைச்சராக இருந்தீர்கள் அப்பொழுது உங்களை தானே கைது செய்திருக்க வேண்டும்.
விஜய்க்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் கருத்துக்கு அந்த சாமி கிடையாது. இது போன்ற கூட்டங்களில் ஒரு உயிர் கூட பலியாக கூடாது அதற்குரிய திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்காக எல்லா கட்சியினரும் ஒன்று சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் கூறி வருகிறார்.
அதை நாம் கடைபிடிக்க வேண்டும், காவல்துறைக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அப்போது இது போன்ற விபத்துக்கள் நடக்காது, விபத்து என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
கூட்டம் நடத்துவதற்கு ஆளுங்கட்சிக்கு உதவுமாறியும் எதிர்க்கட்சிக்கு ஒரு மாதிரியும் கொடுக்கக் கூடாது. அதன்படி தான் நடக்க வேண்டும் என கூறுகிறேன். நான் முதல்வரை தூக்கியோ மற்றவர்களை தாழ்த்தியோ பேசவில்லை, எழவு விழுந்த நேரத்தில் கூட்டணி குறித்து பேசுவது துரோகம் செய்யும் பழனிச்சாமியின் செயல் அநாகரீகம் என கூறுகிறேன். அவரது துரோகத்தை அமமு க விடமாட்டோம்.
நீதிமன்ற கருத்தை நாம் டிஸ்கஸ் செய்வது தவறு, என்னுடைய பார்வையில் அவர்கள் குற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
விஜய்யின் வாகனத்தை பறிமுதல் செய்தால் அவர் வேறு வாகனத்தில் பிரச்சாரம் செய்வார். பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இல்லை என்று அமல், வேறு யாரு முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமியின் துரோகத்திற்கு எதிராகத்தான் அமமுக ஆரம்பிக்கப்பட்டதாகும் நானும் எனது தொண்டர்களோ எப்படி அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்கள்.
அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக வேண்டும் என கூறினேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டுமென எந்த இடத்திலும் நான் கூறவில்லை.
2026 தேர்தலில் யார் முதல்வராக வேண்டும் என தீர்மானிக்க வேண்டியது தமிழக மக்கள் தான், அதுவுமே விரைவில் தெரிந்து விடும்.
இதற்கிடையில் நாம் மூளையை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டம் நடக்கும் வழியில் செல்வது யாரேனும் உடல்நிலை சரியில்லாதவர்களை மீட்பதற்காகவோ அல்லது விபத்தில் சிக்குபவர்களை மீட்பதற்காகவோ செல்லலாம், அதை நாம் தவறாக சொல்லக்கூடாது. இதை அரசியல் ஆக்கக்கூடாது.
விபத்துக்கள் எல்லா ஆட்சியிலும் நடக்க தான் செய்கிறது ஆனால் இதில் காவல்துறையை குறை சொல்வது தவறு அவர்கள் கவனமாக இருங்கள் என்று வேண்டும் என்று சொல்லலாம் அவர்களும் மனிதர்கள் தான் கூட்டத்தில் மயங்கி விழும்போது போலீசார் என்ன செய்ய முடியும், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
முதல்வரிடம் திருமாவளவன் விஜய் கொடுத்த பேட்டியை பார்த்த தான் கோரிக்கை வைத்தார். முதல்வர் அதில் நிதானமாக செயல்பட்டார்.
நான் யாருக்கும் ஆதரவாகவும் சொல்லவில்லை, செயல்படவும் இல்லை. ஒரு கட்சித் தலைவராக நடுநிலைமையாக கூறுகிறேன்.
இந்த விஷயத்தில் இந்த அரசும், தமிழக முதல்வரும் சரியாக நடக்கிறார்கள் என நான் கூறுகிறேன். எடப்பாடி பழனிச்சாமி போல் என்னால் கூற முடியாது. தற்பொழுது விவசாயிகள் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை போராட்டம் வருகின்றனர்.
சட்ட ஒழுங்கு சரியில்லை, இப்படி இருந்தும், கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு தான் வாக்களித்துள்ளனர் என்ன என்று அதனை நாம் பார்க்க வேண்டும்.
திருவெறும்பூரில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நான்கு கூட்டணிகள் உள்ளது ஐந்தாவது அணியாக வேண்டுமானாலும் நாங்களும் வரலாம் நாங்கள் யாருடன் கூட்டணி என்பது டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் மாதத்தில் தான் தெரியும். இன்றைய சூழ்நிலையில் நாங்கள் தனியாக நிற்க முடிவு எடுக்கவில்லை. நீங்கள் எதிர்பாராத கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டு யார் திமுகவை வீழ்த்துவீர்களா அல்லது அதிமுகவை வீழ்த்துவீர்களா என கேட்டதற்கு, நாங்கள் துரோகத்தை வீழ்த்துவதற்கு தான் முடிவு செய்துள்ளோம் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ராஜசேகர், செந்தில்நாதன் மற்றும் அமமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0