தலைமறைவான புஸ்லி ஆனந்த், நிர்மல்குமாரை கைது செய்ய 3 தனிப்படைகள் -மத்திய மண்டல ஐஜி

Oct 1, 2025 - 12:09
 0  33
தலைமறைவான புஸ்லி ஆனந்த், நிர்மல்குமாரை கைது செய்ய 3 தனிப்படைகள் -மத்திய மண்டல ஐஜி

தலைமறைவான புஸ்லி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய 3 தனிப்படைகள் -மத்திய மண்டல ஐஜி

திருச்சி மத்திய மண்டலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் அதிக கவனம் செலுத்தும் மத்திய மண்டல ஐஜி நிர்மல் ஜோஷிகுமார், கரூர் துயர சம்பவத்திற்கு காரணமான தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு;

கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தனிப்படை போலீஸார் கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். அவர்கள் இருவரையும் நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் அறிவித்தார் நீதிபதி பரத்குமார். அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. நேற்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு கரூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய மத்திய மண்டல ஐஜி தனி கவனம் எடுத்து மூன்று தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறார். 

முன்னதாக, இன்று காலை தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரை கைது செய்ய சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0