பனையூர் பயங்கரவாதி நடிகர் விஜய்; உடனடியாக கைது செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

Sep 27, 2025 - 23:35
 0  56

பனையூர் பயங்கரவாதி நடிகர் விஜய்; உடனடியாக கைது செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

தவெக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் பலியாக்கின. சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து நிலையில் விஜய் இரங்கல் தெரிவிக்காமல் இருக்கிறார். 

இந்த நிலையில் திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் கடுமையான கண்டனத்துடன் தமது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் விபரம் வருமாறு;

நடிகர் விஜயின் விக்கிரவாண்டி முதல் மாநில மாநாடு போட்ட பொழுதே, மாநாட்டிற்கு செல்லும் வழியில் விபத்தில் உயிரிழந்த திருச்சியை சார்ந்த சகோதரர்கள் சீனிவாசன், கலை ஆகியோருக்கு மாநாட்டில் இரங்கல் தெரிவிக்காததையும், நிவாரணம் அறிவிக்க வேண்டும் முதன் முதலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் குரல் கொடுத்தோம். இதற்கு பிற்பாடு மிக தாமதமாக நடிகர் விஜய் பாதிக்கபட்டவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கினார்.

தற்பொழுது எந்தவித பொறுப்புணர்வும், குற்ற உணர்வுயில்லாமல் நடிகர் விஜயின் செயல் கண்டிக்கதக்கது. இந்த தும்பியல் சம்பவத்திற்கு முழு முதற் பொறுப்பு நடிகர் விஜய்யே ஆவார். 

எனவே, இச்சம்வத்திற்கு காரணமான நடிகர் விஜயை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவதுடன், நடிகர் விஜய்யை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

மேற்கண்டவாறு, மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கிஷோர் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0