பசுமை பூங்காவை மீட்டெடுக்க கையெழுத்து இயக்கம் துவக்கம்; சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

Sep 25, 2025 - 20:59
Sep 25, 2025 - 21:00
 0  23
பசுமை பூங்காவை மீட்டெடுக்க கையெழுத்து இயக்கம் துவக்கம்; சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

பசுமை பூங்காவை மீட்டெடுக்க கையெழுத்து இயக்கம் துவக்கம்; சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

பசுமை பூங்கா பாதுகாப்பு குழு என்ற ஒரு குழு திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் நோக்கம் பசுமையை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், மாநகராட்சி பயன்பாட்டில் உள்ள பல்வேறு பூங்காக்களில் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தி, செயல்படாத பூங்காக்களை புனரமைத்து மீட்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது. 

இந்தக் குழுவில் இன்று தண்ணீர் அமைப்பும் , எக்ஸனோரா அமைப்பும் ஒன்றாகச் சேர்ந்து அதன் நிர்வாகிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். 

இந்த ஆலோசனையின் இறுதியில் அரசு பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு பூங்காக்கள் சிதலைமடைந்து, அங்குள்ள மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதை தடுப்பது எனவும், திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பசுமை பூங்காவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உணர அமைப்பு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும் அதை பொருட்படுத்தாத மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், சிதலமடைந்து இருக்கும் பசுமை பூங்காவை மீட்டெடுத்து புனரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக, கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்து இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சியை நடத்தினர். 

பசுமை பூங்கா பாதுகாப்பு குழுவின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், பிஜுமாத்யூ, துரைசாமி, ஜெயமுருகன் ஆகியோரும், தண்ணீர் அமைப்பின் சார்பில், கே.சி நீலமேகம், பால் குணா லோகநாத், தி.நெடுஞ்செழியன், ரகுபதி, ஆகியோரும், எக்ஸனோரா சார்பில், பாலசுப்ரமணியம், சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்துக்கு வித்திட்டனர்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0